Showing posts with label வேலன்.பிடிஎப்.velan.free software.books.windows xp.windows 7.vista.. Show all posts
Showing posts with label வேலன்.பிடிஎப்.velan.free software.books.windows xp.windows 7.vista.. Show all posts

வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு)

கல்லுாரி -பள்ளி மாணவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய ரீடராக இதை சொல்லலாம்.இ-புக் இப்போது பரவலாக பிரபலமாகி வருகின்றது. அவ்வாறான இ-புக் மற்றும் பி.டி.எப். புத்தகங்களை விரும்பியவாறு படிக்க,பதிவேற்ற புதிதாக வந்துள்ள ரீடர் தான் மார்ட்வியு ரீடர்.22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்யும் சமயம் இணைய இணைப்பு அவசியம் இருக்கவேண்டும்.இதனை பதிவிறக்கி ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புத்தகங்கள் எவ்வாறு எல்லாம் படிக்கலாம் என்று இதில் விளக்கங்கள்  கொடுத்துள்ளார்கள். இதன் மேல்புறம் கர்சரை கொண்டு செல்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் எட்டாவதாக உள்ள Download e-books கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கல்வி-education.மருத்துவம்-medical,அறிவியல்science.சமையல். அழகு குறிப்புகள் என பலவகைகளை சார்ந்த சுமார் 5000 புத்தகங்கள் இதில் உள்ளது.தேவையை தேர்வு செய்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.பதிவிறக்கம் செய்யும் புத்தகங்கள் நமது கணிணியில ஸ்டோராகிவிடும். இணைய இணைப்பு internet connection இல்லாத சமயங்களில நாம் பொறுமையாக படித்துக்கொள்ளலாம்.இதில் புத்தகங்கள் பெயர் -வெளியான ஆணடு -மாதம்-மொழி,புத்தகத்தின் கொள்ளளவு,புத்தகத்தின் மொத்த பக்கங்கள் ஆகிய விவரம் இருக்கும். புத்தகத்தை நாம் ப்ரிவியு பார்க்கலாம். பிடித்திருந்தால் பதிவிறக்கி கொள்ளலாம்.ப்ரிவியு காண புத்தகத்தின் பக்கத்தில் உள்ள லென்ஸ் அழுத்த வேண்டும். புதிய விண்டோ திறக்கப்பட்டு உங்களுக்கு பிரிவியு தெரியும். பதிவிறக்கப்பட்ட புத்தகத்தை நீங்கள் வலமிருந்து இடமாகவோ - மேலிருந்து கீழாகவோ விரும்பியவாறு புத்தகத்தின் பக்கங்களை திருப்பி படிக்கலாம்.புத்தகத்தின் பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த பக்கத்திற்கும் முன்பக்கம் பார்க்க இடதுபுறம் உள்ள அம்புக்குறியையும் அழுத்த வேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல புத்தகத்தின் 12 பக்க தம்ப்நெயில் வியு thumpnailview பார்க்கலாம். தேவையான பக்கத்தை கிளிக் செய்ய புத்தகம் முழுபக்கத்திற்கு வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் இன்டெக்ஸ் -  சர்ச் வசதியும் உண்டு. அதைப்போல் உங்களிடம் சிறந்த புத்தகங்கள் இருந்தால் மற்றவர்களும் படிக்க அதை நீங்கள் இதில் பதிவேற்றலாம்.ஒரே சமயத்தில் பல புத்தகங்கள் டவுண்லோடு செய்யும் வசதியும் எவ்வளவு டவுண்லோடு ஆகியுள்ளது என்கின்ற விவரத்தையும் இதில் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதில் கீழே உங்களுக்கு ஒரு ஸ்லைட் பார் இருக்கும். கீழே உள்ள் விண்டோவினை பாரு்ஙகள்.
இதில் நீங்கள் ஸ்லைடை எங்கு நகர்த்துகின்றீர்களோ அந்த இடத்திற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். அதைப்போல ஒரு புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்ல இதில் உள்ள கட்டத்தில் பக்கத்தின் எண்ணை தட்டச்சு செய்து கிளிக் செய்ய நீங்கள் அந்த பக்கத்திற்கு அழைதது செல்லப்படுவீர்கள்.
புத்தகத்தின் எழுத்துக்களை ஜீம்zoom செய்து பார்க்க மவுஸின் இரண்டு பக்கமும் ஒரு சேர அழுத்துங்கள். உங்களுக்கு படம் பெரியதாக தெரியும். அதைப்போல் உங்களிடம்pdf பிடிஎப் பைல்கள் இருந்தால் அதையும் மார்ட்வியுவிற்கு மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் பிடிஎப் மட்டும் இலலாமல் புகைப்படங்கள்photos.ஜிப்-ரேர் zip rar பைல்களையும் நாம் மார்ட்வியுவிற்கு மாற்றிக்கொள்ளலாம். அருமையான சாப்ட்வேர்software இது. பயன்படுத்தும்போதுதான் அதன் அருமை உங்களுக்கு தெரியும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...