ஸ்பைரல் பைண்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புகைப்படங்களில் நாம் ஸ்பைரல் பைண்டிங் எபெக்ட் கொண்டுவரலாம். அதை எவ்வாறு கொண்டுவருவது என்று பார்க்கலாம்.36 கே.பி.அளவில் சின்ன அக்ஷன் டூலான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வழக்கப்படி இதனை போட்டோஷாப் ஆக்ஷன் டூலில் இணைத்துக்கொள்ளவும். கீழே உள்ள திருவள்ளுவர் படத்தை பாரு்ங்கள்.
.போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூலினை தேர்வு செய்யும் முன் இதில் நெடுக்கு வாட்டம். மற்றும் குறுக்கு வாட்டம் என இரண்டு தேர்வு கள் உள்ளது.புகைப்படத்திற்கு ஏற்ப வாட்டத்தை தேர்வு செய்யுங்கள்பின்னர் தேவையான படத்தை தேர்வு செய்யவும்.Width எந்த Pixel அளவில் உள்ளதோ அதற்கேற்ப அளவினை ஆக்ஷன் டூலில் தேர்வு செய்யவும்.நெடுக்கு வாட்டத்தில் நான் தேர்வு செய்துள்ள திருவள்ளுவர் படம் கீழே-
சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்களுக்கு அழகான ஸ்பைரல் பைண்டிங் எபெக்ட்டுடன் படம் வந்துள்ளதை காணலாம்.கீழே உள்ள படத்தினை பாரு்ங்கள்.
குறுக்கு வாட்டத்தில் திருவள்ளுவர் சிலை படம் கீழே-
எபெக்ட் கொடுத்தபின்னர் வந்த படம் கீழே-
இதைப்போலவே விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபம் படம்-ஆக்ஷன் டூல் மூலம் எபெக்ட் கொடுத்தபின்னர் வந்துள்ள படம் கீழே-
ஆல்பம் தயாரிப்பவர்கள் இந்த டூல் முலம் அழகான புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.