பாக்கெட் கால்குலேட்டர்,டேபிள் கால்குலேட்டர்,சயின்டிபிக் கால்குலேட்டர் என கால்குலேட்டர்கள் கேள்விப்பட்டிருப்போம்.கம்யுட்டரில் உபயோகிக்கும் Deskcalculator பற்றி இன்று பார்க்கலாம்.இதுதான் ஏற்கனவே நமது கம்யுட்டரில் இருக்கின்றதே என நீங்கள் கேட்கலாம். ஆனால் நிறைய வசதிகளுடன் உள்ள 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை நீங்கள் இங்கு கிளிக் செய்து பயன்படுத்திப்பார்க்கும் சமயம் தான இதன் வசதிகளை பார்த்து ஆச்சரியப்பட்டுபோவீர்கள்.நீங்கள் ப்திவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் File. Edit. Converter Options என நான்கு டேப்கள் உள்ளன. கணக்கு புத்தகத்தில் Vertical.Horizontal.None என எதுவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.Converter -ல் நீங்கள் விரும்பும் வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Help நீங்கள் கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். அதில் தேவையான மாற்றங்களை - வசதிகளை நீங்கள் செய்துகொ்ள்ளலாம்.
இதில வட்டி கணக்கீடு செய்வதும் Interest Calculation இணைக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விண்டோவினை பாருங்க்ள.
வியாபாரிகளுக்கும் இதில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் பொருளின் வாங்கும் விலை - விற்கும் விலை - லாபம் இதில் எளிதில் போட்டுக்கொள்ளலாம்.Operation கிளிக் செய்தால் வியாபரத்திற்கு பயன்படும் இதர கணக்கீடுகளையும் காணலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வியாபாரத்திற்கு தேவைபடும் மற்றும் ஒரு கால்குலெஷன் கீழே-
கரண்சி கன்வர்ட்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது. தேவையான நாட்டின் தேவையான மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இது தவிர வேறு என்ன வசதிகள் இதில் இருக்கு என்கின்றீர்களா? நீங்கள் தட்டச்சு செய்ததை நேரடியாகExcel எக்ஸெல்,Word வேர்ட், என மாற்றிக்கொள்வதோடு அல்லாமல் நண்பருக்கு இ-மெயிலும் அனுப்பலாம்.மாணவர்களு்க்கு பயன்படும் Scientific Calculator சயின்டிபிக் கால்குலேட்டரும் இதில் இணைந்துள்ளதால் மாணவர்களுக்கும் இது பெரிதும் பயன்படும்.இதில் உள்ள அனைத்து வசதிகளையும் குறிப்பிடுவதானால் இன்னும் ஒரு பதிவு போடும் அளவிற்கு இதில் சங்கதி உள்ளது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்








