நம்மிடம் உள்ள PSD படங்களை JPG ஆக மாற்ற நாம் போட்டோஷாப் மூலம் தான செய்யமுடியும். அனைவரும் போட்டோஷாப் வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது.அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு பயன்படுகின்றது.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.easy2convert.com/psd2jpg/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள இன்புட் பைலில் உங்களுக்கான PSD பைலை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் JPG படத்தினை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Image Quality எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நமக்கான படத்தின் தரத்தினை தேர்வு செய்யலாம்.இறுதியாக நீங்கள் Concert கிளிக் செய்யவும். இப்போது உஙகளுக்கான படம் JPG ஆக கிடைக்கப்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.