Showing posts with label astrology.jathgam.jothidam.ராகுகாலம் எமகண்டம் சுலபமாக பார்க்க. Show all posts
Showing posts with label astrology.jathgam.jothidam.ராகுகாலம் எமகண்டம் சுலபமாக பார்க்க. Show all posts

ராகு காலம் எமகண்டம் சுலபமாக பார்க்க

ராகு காலம் - எம கண்டம் சுலபமாக பார்க்க

நம்மில் பலர் ராகு காலம் - எமகண்டம் பார்த்துதான்

பெரும்பாலான வேலைகளை செய்வார்கள். முக்கிய

மான நிகழ்ச்சிகளை ராகுகாலம்-எமகண்டத்தில் தவிர்த்து

விடுவர். ஆனால் நம்மில் பல பேருக்க ராகுகாலம்

எமகண்டம் எப்பொழுது என்று கேட்டால் காலண்டரை

தேடுவார்கள் அல்லது பாக்கட் டைரியை பிரிப்பார்கள்.

இவை இரண்டும் இல்லாமல் சுலபமாக ராகுகாலம்

எமகண்டம் எப்படி பார்ப்பது என பாரக்கலாம்.

முதலில் ராகு காலம்.

திருவிழா மயத்தில் வெளியில் புறப்பட்டு

விளையாட செல்வது ஞாயமா?

இதில்

திருவிழா - திங்கள் - 07.30 - 9.00

சமயத்தில் - சனி - 09.00 - 10.30.

வெளியில் - வெள்ளி - 10.30 - 12.00.

புறப்பட்டு - புதன்- - 12.00 - 01.30.

விளையாட -வியாழன் --01.30 - 03.00.

செல்வது- செவ்வாய்- 03.00 - 04.30.

ஞாயமா? - ஞாயிறு -- 04.30 - 06.00.

இந்த பாடலை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

முதலில் உள்ள திங்கள் கிழமை 07.30 என நினை

வில் கொண்டு அதிலிருந்த 01.30 மணிநேரமாக

கூட்டிக்கொண்டே செல்லுங்கள். இதுவும்

மனப்பாடம் செய்ய கஷ்டமாக உள்ளதா? இந்த

எண்ணை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

1,65,427. இதில் திங்கள் முதல்நாளாக

எடுத்துக்கொள்ளுங்கள்.

திங்கள் - 1

செவ்வாய் - 2

புதன் - 3

வியாழன் - 4

வெள்ளி - 5

சனி - 6

ஞாயிறு - 7

இந்த எண்ணிற்கு ஏற்ற கிழமை நினைவு

கொண்டு ராகு காலத்தை கணக்கிடலாம்.

இனி எம கண்டம் கணக்கிடுவதை காணலாம்.

விடுதலை புலிகள் சென்ற திசையில்

ஞாம்பந்தன் வெளியேறலாமா?

இதில்

விடுதலை - வியாழன்- 06.00-07.30.

புலிகள்- புதன் - 07.30- 09.00.

சென்ற - செவ்வாய்- 09.00 -10.30.

திசையில்- திங்கள்- 10.30 - 12.00.

ஞான - ஞாயிறு - 12.00 - 01.30.

சம்பந்தன்- சனி- 01.30-03.00.

வெளியேறலாமா?-வெள்ளி- 03.00 -04.30.

இதில் முதலாவதாக வியாழக்கிழமையை

நினைவில் கொண்டு அதிலிருந்து 01.30

மணிநேரமாக கூட்டிக்கொண்டு செல்லுங்

கள்.

எமகண்டத்திற்கு இந்த எண்ணை நினைவில்

கொள்ளுங்கள். 43,21,765.

இதில் திங்கள் முதல்நாளாக

எடுத்துக்கொள்ளுங்கள்.

திங்கள் - 1

செவ்வாய் - 2

புதன் - 3

வியாழன் - 4

வெள்ளி - 5

சனி - 6

ஞாயிறு - 7

இந்த எண்ணிற்கு ஏற்ற கிழமை நினைவு

கொண்டு எமகண்டத்தை கணக்கிடலாம்.

இது தவிர சிலர் பொதுவாக ராகு காலத்தை

பார்க்காமல் சூரிய உதய நாழிகையிலிருந்து

சரியான நேரத்தில்

ராகு காலத்தை எமகண்டத்தை

கணக்கிட விரும்புவர். திருமணம்

போன்ற முக்கிய சுபநிகழ்ச்சிக்களுக்கு

இந்த

கால்குலெட்டர் உதவும்.

அவர்களுக்கான இந்த கால்குலெட்டர்

அட்டவணை கீழே கொடுத்துள்ளேன். அதில்

அன்றைய சூரிய உதய நேரத்தை குறிப்பிட்டு

சரியான ராகுகாலத்தைஎமகண்டத்தை

கணக்கிட்டுக்கொள்ளலாம்.

அந்த இணைய தளமுகவரி:-


http://www.agasthiar.org/panchang/rahu/rahu.htm

http://www.astrojyoti.com/rahukalam.htm

நல்லநேரம், ஜோதிடம் நம்பிக்கை உள்ளவர்

களுக்காக மட்டும் இதை பதிவிட்டுள்ளேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் Copy செய்யும் சிடிகளின் மேல்புறம் மறக்காமல்
அன்றைய தேதியைகுறிப்பிடவும்.
பின்னர் நாம் சிடியை பார்க்கும் சமயம்
அந்த தேதி பல வகைகளில்
நமக்கு உதவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...