சிறுவர்களுக்கான பிரத்தியேக சேமிப்பு கணக்கு
CANCHAMP

தங்களுக்கு நிச்சயம் 1 முதல் 12 வயது வரை குழந்தைகள்
உங்கள் வீட்டில் இருக்கும். உங்களுக்கு
தெரிந்தவர்களுக்காவவது நிச்சயம் குழந்தைகள்
இருக்கும். அவர்களின் எதிர்கால கல்விக்காக
கனராவங்கி ஆரம்பித்துள்ள சேமிப்பு கணக்குதான்
கேன்சாம்ப்(canchamp). இதில் சேர்வதால் என்ன
நன்மை என்று கேட்கிரீ்ர்களா? ஒரே கல்வித்
தகுதி உடைய இரண்டுபேர் மேல்படிப்புக்காக
வங்கியில் விண்ணப்பித்தால் கேன்சாப்
கணக்கு உள்ளவர்க்கே கேட்ட தொகை கிடைப்ப
துடன் முன்னுரிமை அளிக்கப்படும்.
உங்கள் மகன் அல்லது மகள் 12 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
கணக்கை தொடங்க வெறும் 100 ரூபாய் போதும்.
பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை இயக்கலாம்.
கணக்கு புத்தகம், வாரிசு நியமணம் மற்றும்
இணையதள வசதி உள்ளது.
நீங்கள் சேமிக்கும் தொகை ரூபாய் 15,000க்கும்
மேல் செல்லும் சமயம் அதை நிரந்தர வைப்பில்
மாற்றும் வசதி உண்டு்.
இக்கணக்கினை வைத்திருப்பவர் எந்த பிணைத்
தொகையும் இன்றி எதிர்காலத்தில் (+2 முடித்தவுடன்)
உயர்கல்வியைக் கற்க கல்விக்கடன் பெறும் தகுதியை
பெறுகிறார்.
இந்த கணக்கிற்கான நிபந்தனை என்னவென்றால்:-
ஒவ்வொரு அரையாண்டிலும்(ஆறு மாதத்திற்கு ஒரு
முறை) குறைந்தது இரண்டு முறை கணக்கில் பணம்
செலுத்தியிருக்கவேண்டும். இவ்வாறு செலுத்திய
மொத்த தொகை கிராம புறக் கிளைகளில் ரூபாய்
500க்கு குறையாமலும் நகர்புற கிளைகளில் ரூபாய்
1000க்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
கணக்கிலிருந்து +2 படிப்பு முடியும் வரை செலுத்திய
தொகையினை திரும்ப பெற்றிருக்க கூடாது.
வங்கி கணக்கு ஆரம்பிக்க தேவையானவை:-
1. குழந்தையின் பிறந்த சான்றிதழ்
2. குழந்தையின் புகைப்படம்-2
3. ரேசன் கார்ட் ஜிராக்ஸ் - 1
4. ரூபாய் 100 - அல்லது அதற்கு மேலும்
வங்கி கணக்கு ஆரம்பித்ததும் உங்களுக்கு
அழகான கம்யூட்டர் மாடல் மானிட்டர்
உண்டி ஒன்று வழங்குவார்கள். அத்துடன்
புகைப்பட ஆல்பம் ஒன்றும் கையேடும்
வழங்குவார்கள்.
அவர்கள் வழங்கும் உண்டி படம் கீழே:-

செய்கின்றோம். அவர்கள் எதிர்கால கல்விக்காக
மாதம் ரூபாய் 100- செலவிடலாம் அல்லவா.
குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக இதை
பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
வங்கியில் செலுத்தும் காசேலை மற்றும் வரை ஓலை யின் தேதி மற்றும் எண்ணை தனியே வங்கி ரசீதில் குறித்து வையுங்கள். பின்னாலில் இவைகள் தவறினால் மீண்டும் பெற உதவும்.