Showing posts with label docx to doc converter. Show all posts
Showing posts with label docx to doc converter. Show all posts

வேலன்-வேர்ட்-7 பைல்களை சுலபமாக மாற்ற-Docx to Doc converter

நம்மிடம் Microsoft Word Office 3  -தான் வைத்திருப்போம். ஆனால் நமக்கு வரும் கடிதம் Microsoft Word Office 7 -ல் வரும். வேர்ட் 3-ல் அதனை படிக்க முடியாது. அதைப்போல பிடிஎப் பைல்களை அதற்குரிய பிடிஎப் ரீடர் இருந்தால்தான் படிக்க முடியும். இந்த Docx to Doc Converter  மூலம் சுலபமாக படிப்பதுடன் சுலபமாக அதை பிடிஎப் ஆகவோ - xml பைலாகவோ மாற்ற முடியும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட சின்ன சாப்ட்வேரான இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் உள்ள Select File  மூலம் நீங்கள் எந்த பைலை திறக்க விரும்புகின்றீர்களோ அந்த பைலை திறக்கவும்.இடது பக்கம் பைலின் தம்ப்நெயில் வியு வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள View கிளிக் செய்து இதன் நிறம் மாற்றிக்கொள்ளலாம். மேலும் இதிலிருந்து இந்த பைலை நாம் பிடிஎப் பாகவும்.எக்ஸ்எம்எல் பைலாகவும் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மேலும் இதிலிருந்து தேவையான பக்கத்தை தேவையான அளவில் நேரடியாக  பிரிண்ட் எடுத்து்வைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 பக்கங்களை மேலும் கீழும் நகர்த்திப்பார்பது - அளவினை பெரிதுபடுத்திப்பார்பபது என எண்ணற்ற வசதிகள் இதில உள்ளது.சின்ன சாப்ட்வேரான இதை பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது இது அவசியம் உதவும். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்று சொல்வார்கள் அல்லவா? அந்த பழமொழிக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பொருந்தும். பதிவினை பாரு்ங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...