Showing posts with label english.english lession.language.velan.english tutorial.web.windows xp.ஆங்கிலம். Show all posts
Showing posts with label english.english lession.language.velan.english tutorial.web.windows xp.ஆங்கிலம். Show all posts

வேலன்:-ஆங்கிலத்தில் திறனை அறிய

கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு
இருந்தால் சற்றே போர் அடித்துவிடும். அதனால்
இன்று சற்று வித்தியாசமான பதிவாக ஆங்கில
அறிவை வளர்க்கும் விளையாட்டை பதிவிட்டுள்ளேன்.
உங்கள் ஆங்கில அறிவை சோதிக்கும் விதமாக
இதில் கட்டங்கள் கொடுக்கப்படும். மேலே
ஆங்கில எழுத்துக்கள் கொடுக்கப்படும். கர்சர் மூலம்
நாம் ஆங்கில எழுத்துக்களை தேர்வு செய்து வார்த்தை
களை அமைக்க வேண்டும். சரியாக அமைந்து
விட்டால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். 
தவறாக இருந்தால் அதில் வரையப்படும் மனிதன்
தூக்கு மாட்டிக் கொள்வான்.விளையாடிப்பாருங்கள்.
இது மொத்தம் 60 கே.பி.தான்.. இதை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி ஓப்பன் செய்ததும் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகி அதில் ஒரு
பென்சில் வந்து தானே கோடு போடும்..
கோடுபோட்டு முடித்ததும் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் மேல்புறம் உள்ள Categories கிளிக் செய்தால் கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள கட்டத்தில் உங்களுக்கு
தேவையானதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு
செய்த கட்டத்திற்கு சம்பந்தமான வார்த்தைகள் இதில்
வரும்.
இப்போது மேலே உள்ள கட்டத்தில் இருந்து எழுத்துக்களை
தேர்வு செய்யுங்கள். நான் கர்சர் மூலம் A தேர்வு
செய்தேன்.
நீங்கள் தேர்வு செய்யும் எழுத்துக்கள் சரியாக இருந்தால் 
கட்டம் பூர்த்தியாகும். இல்லையென்றால் எழுத்துக்கள் மேலே
சென்று தூக்கு மேடை ரெடியாகும்.
நான் வார்த்தைகளை சரியாக சேர்தததினால் வந்த படம்
கீழே:-
சரியாக சேர்க்கவில்லையென்றால் வரும் படம் கீழே:-
உங்கள் ஆங்கில அறிவை வளர்த்து மனிதன் தூக்கு போட்டுக்
கொள்வதிலிருந்து காப்பாற்றுங்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
கீழே பார்த்தாலே பயமாக இருக்கின்றதே....!

இன்றைய பதிவிற்க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...