Showing posts with label game.velan.children.street .shuffle..வேலன்.விளையாட்டு;.குழந்தைகள்.. Show all posts
Showing posts with label game.velan.children.street .shuffle..வேலன்.விளையாட்டு;.குழந்தைகள்.. Show all posts

வேலன்:-மாறிய பாதைகள்-street shuffle

குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை விட்டுவிட்டார்கள். அதனால் இந்தவாரம் குழந்தைகள் ஸ்பெஷல்.. அதனால் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுக்களை தினம் பதிவிடலாம் என உள்ளேன்.ஒரு வாரத்திற்கு அவர்களிடம் கம்யூட்டரை விட்டுவிடுங்கள்..இனி விளையாட்டினை பார்க்கலாம். பாதை மாறி போகும்போது ஊரும்வந்து சேராது....என பிரபல பாடல்வரும். அதைப்போல இந்த விளையாட்டில் நாம் வண்டிக்கு நாமே பாதை அமைத்துக்கொள்ளவேண்டும்.28 கே.பி. அளவுள்ள இந்த விளையாட்டினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது வண்டி செல்லும் பாதை குறிப்பிடபட்டிருக்கும். பாதைகள் மாறி மாறிஇருக்கும்.தேவையான சரியான பாதையை தேர்வு செய்ய இருக்கும் கட்டத்தில் வைத்து கர்சரால் கிளிக் செய்யுங்கள்.கட்டம் பாதை அமைத்துதரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.. 
சில லெவல் செல்லும் சமயம் தனியே பாப்அப்மெனு தோன்றும்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தால் உங்கள் வண்டிக்கு பெட்ரோல்யார்போடுவார்கள். எனவே இதுவரை நீங்கள் வென்ற லெவலுக்கு ஏற்ப டாலரில் தொகையை பெற்றுக்கொள்ளுங்கள். அதன்மூலம்தேவையான பெட்ரோலை நிரப்பிக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
லெவல் செல்ல செல்ல விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்லும்.இதிலேயே விளையாட்டுக்கான டெமோ இணைத்துள்ளதால் எளிதில் பார்த்து அறிந்துகொள்ளலாம்.ஒரு லெவல் சென்றதும் உங்களுக்கு விளையாட்டின் சூத்திரம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...