சில டிவிடிக்களில் வீடியோ பதிவிட்டிருப்பார்கள். அதனை நாம் பார்க்க மட்டுமே முடியும் அதனை டிவிடியிலிருந்து டிவிடியாகவோ காப்பி செய்யவோ முடியாது அவ்வாறான வீடியோக்களையும் நமக்கு பிடித்த படங்களில் இருந்து பிடித்த காட்சியையும்.நகைச்சுவை காட்சியையும்.பாடல்களையும் காப்பி செய்திட இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் நமக்கு பயன்படுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் விரும்பி தேர்வு செய்த வீடியோவானது நீங்கள் சேமித்த .இடத்தில் வீடியோ பைலாக அமரந்திருப்பதை காணலாம். இதனை தனியே ப்ளே செய்து பார்க்கலாம்.
அதுபோல விரும்பிய புகைப்படத்தினையும் வீடியோவிலிருந்த நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்படங்களாக சேமிக்கும் வசதியையும் இதில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.