வாழ்த்தலாம் வாங்க பதிவிற்கு வந்து வாழ்த்தி ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..ஏப்ரல் மற்றும் மே மாதம் பிறந்த நாள் -மற்றும் திருமணநாள் கொண்டாட இருக்கும் நண்பர்கள் தங்கள் விவரங்களை கீழ்கண்ட இ-மெயில் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.முகவரி:-vazthalamvanga@gmail.com.
அன்புடன்,
வாழ்க வளமுடன்.
வேலன்.
இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் டிசைன் செய்ய இங்கு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட தளம் தோன்றும்.அதில்
Canvas Tiles Photo Effect
Film Strip Photo Effect
Motivational Posters
Photo Circles Effect
Pixel Photo Frame
Postage Stamp Photo Effect
Star Dust Photo Effect
Swirl Photo Frame
Wall Painting Photo Effect
Whirl Photo Effect
போன்ற எபெக்ட் கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு டிசைனை தேர்வு செய்து பின்னர் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Upload கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருந்தபின் நீங்கள் தேர்வு செய்த டிசைனில் படம் வருவதை காணலாம்.
நான் Film Strip Photo Effect -ல் இணைத்த புகைப்படம் கீழே:-

மற்றும் ஓரு டிசைன் கீழே:-

இதில் மொத்தம் 42 எபெக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.எந்த டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தின் ப்ரிவியு பாருங்கள்.
இதில் உள்ள ப்ரேம் டிசைனில் விதவிதமான பூக்கள் டிசைன்கள் உள்ளது். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில ஓரு படம் நாம் தேர்வு செய்தால் போதுமானது். அதன் மூலமே மற்ற எல்லா டிசைன்களையும் நாம் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம் மேலும் அதில அளவினை மாற்றுவது - திருப்புவது - செய்துகொள்ளலாம். ஒவ்வொரு டிசைனையும் தனியே பதிவிறக்கி சேமித்தும் கொள்ளலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப் பாருங்கள் கருத்தினை கூறுஙகள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ரெண்டுபேரும் போட்டில் ஏறிக்கொண்டால் யார் போட்டை தள்ளி விடுவதாம்...?
இன்றைய PSD டிசைன் படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்






