Showing posts with label jpeg.psd.exe.excell.word.velan.file extention.windows xp. Show all posts
Showing posts with label jpeg.psd.exe.excell.word.velan.file extention.windows xp. Show all posts

வேலன்-பைல்களின் எக்ஸ்டென்ஷன்கள் அறிந்து கொள்ள

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

நம்மிடம் போட்டோக்கள்,வேர்ட்,எக்ஸெல்.சாப்ட்வேர்கள்.ஸிப் பைல்கள் என நிறைய பைல்கள் இருக்கும். ஆனால் அது எந்த வகையை சேர்ந்தது என அதன் அருகில் கிளிக் செய்து பார்த்தால்தான் தெரியும்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.
பெயர் தெரியுமே தவிர அது எந்த வகை புகைப்படம் - JPEG-ஆ. PSD-ஆ. GIF-ஆ என தெரியாது.(இதுபோலவே பிற பைல்வகைகளுக்கும்) இது எந்த வகையை சேர்ந்தது என சுலபமாக அறிந்துகொள்ள ஒரு சின்ன டிக் மார்க் செய்தால் போதும். அனைத்து பைல்வகைகளையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
Start -ரைட் கிளிக் செய்து Explore ஓப்பன் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வருகின்ற விண்டோவில் Tools - Folder Options கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் இரண்டாவதாக உள்ள வியு டேபில் கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள
Hide extentions for known file types  பாக்ஸ் எதிரில் உள்ள கட்டத்தில் உள்ள டிக் மார்க் கிளிக் செய்யுங்கள்.Apply -Ok- கொடுத்துவிட்டு வெளியே வாருங்கள். இப்போது உங்கள் போல்டரில் சென்று பாருங்கள்.பைல்கள் அதன் எக்ஸ்டென்ஷனுடன் காணப்படும்.உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 ஒவ்வொரு படமும் அதன் எக்ஸென்சன் பைலுடன் காணப்படும்.இதுபோலவே எந்த வகை பைலையும் நாம் சுலபமாக அதன் பைல்  வகையை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி தேவையில்லையென்றால் மீண்டும் வந்த வழியே சென்று டிக் அடையாளம் வைத்துவிட்டு வந்து விடுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என் இனிய இல்லம் சிநேகிதி ஸ்வீட்டோட விருதும் கொடுத்துள்ளார்கள். வாங்க...நாம்போய் எடுத்துக்கொள்ளலாம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...