பிடிஎப் பைல்களை வேர்ட்,எச்டிஎம்எல்,ஜேபிஜி,டேக்ஸ்ட் என வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனைஇன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பிடிஎப் பைல்களை கிளிக் செய்திட வரும் விண்டோவில் நமது கணிணியில் உள்ள பைல்களை தேர்வு செய்யவும்.இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திடவும்.அதனைபோல பிடிஎப் பைல்களை புகைப்படங்களாகவும் மாற்றிவிடலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களுக்கான கன்வர்ட் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில்சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைலானது வேர்ட்,எச்டிஎம்எல்,ஜேபிஜிமற்றும் டெக்ஸ்ட் பைல் இதில் நீங்கள் எதனை தேர்வு செய்தீர்களோ அந்த பார்மெட்டுக்கு மாறி இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.