Showing posts with label key board.computer. Show all posts
Showing posts with label key board.computer. Show all posts

வேலன்:-கம்யூட்டரில் தமிழ்மொழியை கொண்டுவர பாகம் -2



சென்ற பதிவில் கம்யூட்டரில் தமிழ்மொழியை 
கொண்டு வர பாகம்-1ஐ பார்த்தோம்.
இன்றைய பதிவில் அதை எவ்வாறு உபயோ
கிப்பது என்று பாரக்கலாம்.
தமிழ்மொழியை கம்யூட்டரில் கொண்டுவருவது
மூலம் சுலபமாக தமிழில் கடிதங்கள் தட்டச்சு 
செய்யலாம்.போல்டர்களுக்கு,பைல்களுக்கு
தமிழில்பெயர் வைக்கலாம்.டிரைவ்களுக்கு 
தமிழில் பெயர் சூட்டலாம். விண்டோஸ்
அப்ளிகேஷன்கள் மற்றும் நோட்பேட்,வேர்ட்
பேட் ஆகியவற்றிலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
இப்போது முதலில் வேர்ட்பேடில் தமிழில்
தட்டச்சு செய்வதை காணலாம்.
முதலில்  Start - All Programs - Accessories - Word Pad
திறந்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
இப்போது டாக்ஸ்பாரில் உள்ள லாங்வேஜ் பாரை கிளிக்
செய்யுங்கள்.(நீங்கள் Alt+Shift கீயை ஒன்றாக அழுத்தியும்
மொழி மாற்றத்தை கொண்டுவரலாம்.) ரைட் . இப்போது
உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும். 
அதே சமயம் உங்கள் மொழியானது ஆங்கிலத்தில்
(ஏரியல்லில்) இருந்து தமிழுக்கு(லதாவிற்கு)
மாறியதையும் கவனியுங்கள்.கீழே உள்ள 
படத்தை பாருங்கள்.
 
அவ்வளவுதான் .நீங்கள் இனி தமிழில் சுலபமாக 
கடிதங்கள் தட்டச்சு செய்யலாம். நடுவில் ஆங்கிலம்
வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.சரி....
ஆங்கில கீ - போர்ட இருக்கு எழுத்துக்களை பார்த்து
தட்டச்சு செய்கின்றோம். தமிழில் கீ - போர்ட்டில் 
எழுத்துக்கள் இல்லையே...அதை எவ்வாறு பார்த்து
தட்டச்சு செய்வது என நீங்கள் கேட்பது புரிகின்றது.
அதற்கும் முன்னரே நான் கம்யூட்டர் திரையில்ஆன்
கீ-போர்ட் உபயோகிப்பது எப்படி என பதிவிட்டுள்ளேன்.
நீங்கள் அங்கு சென்று விளக்கமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
அதில் தமிழ் மொழியை கொண்டுவர பாண்ட்டுகள்
பெயரில் லதாவைதேர்வு செய்துகொள்ளுங்கள்.
இப்போது கீ -போர்டில் லதாவிற்கான எழுத்துருக்கள்
இருப்பதை திரையில் காணலாம். இதுவரை 
புரிகின்றதா.......சரி..
இப்போது போல்டர்களுக்கு தமிழில் பெயர்
வைப்பது எப்படி என பார்க்கலாம். ஏதாவது ஒரு
போல்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதன்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ளதுபோல் விண்டோ தோன்றும்.
அதில் உள்ள ரீ-நேம் கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்கள் பேரல்டரில் முன்புஇருந்த
பெயரானது நீலகலரில் மாறிவிடும். இப்போது 
தமிழில் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.

அவ்வளவுதான். இனி நீங்கள் தமிழில் கடிதங்கள் எழுதலாம்.
போல்டர்களுக்கு தமிழில்பெயர்வைக்கலாம்....
இனி சென்ற பதிவிற்கு வரலாம். சென்ற பதிவில்
இ-கலப்பை யை பற்றியும் என்.எச்.ரைட்டர்பற்றியும்
கருத்துரையில் காரசாரமாக விவாதித்தார்கள்.உங்கள்
வசதிக்காக இங்கு இ-கலப்பையையும் -என்.எச்.ரைட்
டரையும் இணைத்துள்ளேன். தேவைபடுபவர்கள்
தேவையானதை பதிவிறக்கி கொள்ளுங்கள்.தேவை
பட்டால் இரண்டையும் பதிவிறக்கி எது நன்றாக
உள்ளதோ அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்தி கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-

கீ போர்டை தமிழிலே மாத்தறத்துக்கு  Shift Key  கூட
வேறே எந்த கீயையோ அழுத்த சொன்னாரே...!!!
என்ன கீ அது ?
இன்றைய PSD  புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கம்யூட்டரில் தமிழ்மொழியை கொண்டுவர -பாகம்-1



 கம்யூட்டரில் - தமிழ் மொழியை கொண்டுவருவதை
பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். 
ஆனால் புதியவர்களுக்கு இது தெரியாது. தமிழில்
 கடிதங்கள்தட்டச்சு  செய்வது - போல்டர்களுக்கு
 தமிழில் பெயர்வைப்பது போன்றவற்றை
 அவர்களுக்காக நாம் இன்று பார்க்கலாம்.
இந்த வசதி ஏற்கனவே உங்கள் கம்யூட்டரில் இருந்தால்
அதையும் உங்கள் கணிணியில் கொண்டுவந்து
விடுங்கள்.இந்த வசதியைநீங்கள் பெற 
உங்களிடம் விண்டோஸ் ஓ.எஸ். சிடி.
அவசியம் இருக்கவேண்டும்.(சர்வீஸ் ஆள் மூலம்
ஒ.எஸ். மாற்றுபவர்கள் இனியாவது கட்டாயம் 
அவர்களிடம் ஒ.எஸ். சி.டி.வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள்).சரி இப்போது தமிழை எப்படி கொண்டு
வருவது என்று பார்க்கலாம்.

 Start - Control Panel கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வரும்
விண்டோவில்  Regional and Language Options கிளிக்
செய்யுங்கள். கீழ்கணட் விண்டோவினை பாருங்கள்.
 அதில்languages என்கின்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
 அதில் Install files for complex script and right-to-left languages 
including Thai என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக்
செய்யுங்கள். இப்போது உங்கள் எக்ஸ்பி சிடியை
கேட்கும். சிடியை அதன் டிரைவில் போட்டு ஓ. கே.
கொடுங்கள். பைல்கள் காப்பி ஆனது கம்யூட்டரை
ரீ-ஸ்டார்ட் செய்யசொல்லும். ஒ.கே.கொடுங்கள்.
இப்போது மீண்டும் Start - Control Panel செல்லுங்கள்.
மீ்ண்டும் பழைய இடத்திற்கு வாருங்கள்.
 இப்போது Text Services and Input  Languages என்கின்ற
கட்டத்தில் உள்ள Details பட்டனை கிளிக் செய்யுங்கள்.
கீழ்கண்ட விண்டோ கிடைக்கு்ம். அதில் Add என்பதனை
கிளிக் செய்யுங்கள்.
 இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில்  Tamil - ஐ தேடி கண்டுபிடித்து ஓ,கே. செய்யுங்கள்.
Key Board Layout /IME என்பதில் தமிழ் தானாகவே
தேர்வாகியிருக்கும். இப்போது மீண்டும் ஒ.கே.
கொடுங்கள். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
Apply - Ok  கிளிக் செய்யுங்கள். இப்பொது உங்கள் டாக்ஸ்
பாரின் மூலையில் பாருங்கள்.கீழ்கண்ட படம் வந்து
இருக்கும்.
அவ்வளவு தாங்க. தமிழில் தட்டச்சு செய்ய உங்கள்
கணிணி ரெடி.இனி தமிழில் போல்டருக்கு பெயர் 
வைப்பது - தமிழில் கடிதங்கள் எழுதுவது என்பதை
விரிவாக அடுத்த பதிவில் 14-02-2010-ஞாயிற்றுக்கிழமை
காலையில் வெளியிடுகின்றேன்.பதிவின் நீளம் கருதி
இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
பதிவுகளில் நான் பதிவிடுவதற்கு முன்னர்
போட்டோஷாப்பில் இதுபோன்று நிறைய
வேலைகள் செய்து தனியே ஆல்பமாக
போட்டுள்ளேன்.இப்போது நேரம் கிடைப்பதில்லை.
பழைய ஆல்பத்தில் இருந்து உங்கள் பார்வைக்கு
சாம்பிள் ஒன்று:-
 இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...