வீட்டை கட்டிப்பார் -கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள்.இரண்டுமே கடினமான வேலை.ஆனால் நாம் சுலபமாக வீட்டை போட்டோஷாப்பில் கட்டி விடலாம்.ஒரே ஒரு கிளிக் போதும். விதவிதமான வீடுகள் நமக்கு கிடைக்கும். முதலில் 4 எம்.பி. கொண்ட இந்த பிரஷ் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதன் மூலம் நாம் கொண்டுவந்த வீட்டின் டிசைனை கீழே காணுங்கள்.
இந்த வீட்டின் டிசைனில் கொணடுவந்த புகைப்படம் கீழே-
இனி இதை போட்டோஷாப்பில் எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.பிரஷ் டூலை இணைப்பது எப்படி என்று நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். புதியவர்கள் இங்கு சென் று பார்த்துக்கொள்ளவும்.,இப்போது உங்கள் போட்டோஷாப்பில் கீழே உள்ள வாறு பிரஷ்டூல் வந்து அமர்ந்திருக்கும்.
ஒரு புதிய பைலை விண்டோவில் திறந்துகொண்டு இதில் ஏதாவது ஒரு படத்தை கிளிக்செய்யுங்கள். பின்னர் அதை புதிய பைலில் வைத்து கிளிக் செய்தால் படமானது உங்கள் புதிய விணடோவில் அமர்ந்திருக்கும்.கீழே கொடுத்துள்ள விதவிதமான படங்களை காணுங்கள்.
இதில் பிரஷ்டூல் மூலம் புகைப்படத்தை கொண்டுவந்துவிட்டு பிறகு நமக்கு விருப்பமான படத்தை அதில் இணைத்துக்கொள்ளலாம். பின்புறம் கருப்பு -வெள்ளையிலும் படம் கலரிலும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.அதனால்
foregroundcolor கருப்பு நிறத்திலும் backround color வெள்ளை நிறத்திலும் வருமாறு செட் செய்துகொள்ளுங்கள்.
இதில் உள்ள பிற வீடுகளின் டிசைன்படங்கள் கீழே-
கலரிலும் படத்தை கொண்டுவரலாம். ஆனால் கருப்பு -வெள்ளையில் வரும் அழகு கலரில் வருவதில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
என்னங்க..சிம்பிளாக வீட்டை கட்டிவிட்டீங்களா...பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.