Showing posts with label photoshop.photoshop tricks.photo.images.resized.. Show all posts
Showing posts with label photoshop.photoshop tricks.photo.images.resized.. Show all posts

வேலன்-புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை குறைக்க

புகைப்படங்கள் நமது நண்பருக்கு மெயிலில் அனுப்ப விரும்புவோம்...பதிவினில் இணைக்க விருமபுவோம். ஆனால் அதன் அளவு அதிகமாக இருக்கும். பதிவேற்றுவதில் சிரமமும் நேரமும் எடுக்கும். அதை தவிர்க்க படத்தின் தரம் மாறாமல் குறைந்த அளவில் மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 450 கே.பி. அளவில்(1 எம்.பியில் பாதி அளவு) இந்த சாபட்வேர் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை நீங்கள் ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.நீங்கள் தேரந்ததெடுக்க ஒரு புகைப்படத்தையோ அதன் டைரக்டரியையோ தேர்வு செய்யலாம்.
இதில் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் இதில் சிறியது.மீடியம்.பெரியது மற்றும் தேவையான அளவு இதில எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.தேவையான ஆப்ஷன் தேர்வு செய்ததும் ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
சில நொடிகளில படங்கள் அனைத்தும் வேண்டிய அளவிற்கு மாறிவிடும். கீழே 120 கே.பி அளவுள்ள சாதாரண படம்-
படத்தை சிறியதாக மாற்றியபின் 88 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-
அதே படத்தை பெரியதாக மாற்றியபின் 245 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-
உங்களுக்கு மேலே உள்ள மூன்று படங்களிலும் வித்தியாசம் தெரிகின்றதா? மூன்றும் ஒன்றே...ஆனால் அளவில் தான் 88 கே.பி.,120 கே.பி,240 கே.பி என ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகின்றது...மெயிலி்ல் படம் அனுப்ப - பிளாக்கில் படத்தை பதிவேற்ற என உங்களுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படும். உங்கள் நண்பருக்கும் இந்த சாப்ட்வேரை அனுப்பி வைத்தபின் நீங்கள் அளவு குறைத்து அனுப்பிய படத்தை மீண்டும் பெரியதாக்கி பயன்படுத்திக்கொள்ளசொல்லுங்கள்.
பதிவுகளை பாரு்ங்கள. கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...