Showing posts with label ringtone.. Show all posts
Showing posts with label ringtone.. Show all posts

வேலன்-பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற


திரைப்பட பாடல்களை ரிங்டோனாக வைத்திருப்போம். அதில் குறிப்பிட்ட பகுதியை - இசையை - பாடல்வரியை மட்டும் தேர்வு செய்து ரிங்டோனாக வைத்துக்கொள்ள இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. ஒரு சிடியில் பொதுவாக 14 பாடல் வரை பதிவு செய்யலாம். அதே எம்.பி.3 என்றால் 70 பாடல்கள் வரை பதிவு செய்யலாம். இந்த சாப்ட்வேரில் எம்.பி.3 பாடல்களையே மினி எம்.பி.3 ஆக மாற்றிவிடும்.மேலும் இதில் பாடல்களை வேவ் பைல்களாக மாற்றிவிடலாம். சில ஆடியோ சிடிக்களை நாம் கேட்க முடியும். ஆனால் கம்யுட்டரில் சேமிக்கவும் எம்.பி.3 ஆகவும் மாற்ற முடியாது. இந்த சாப்ட்வேரில் அதுவும் சாத்தியமே. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியு கிளிக்செய்து பாடலை தேர்வு செய்யுங்கள.
பாடலின் விருப்பமான இடம் வந்ததும் கர்சரால் தேர்வு செய்யவும். தேர்வு செய்த பகுதியானது நிறம் மாறிஉள்ளதை கீழே உள்ள படத்தினில் பார்க்கலாம்.
இப்போது சிடியில் இருந்து பாடலைதனியே பிரிப்பதை காணலாம். ஆடியோ சிடியை டிரேயில் போடவும். பாடலை தேர்வு செய்யவும். வேண்டிய பார்ம்ட்டையும் சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போலவே பெரிய எம்.பி.3 பாடலில் இருந்து மினி எம்.பி.3 பாடலாக மாற்ற பாடலை தேர்வு செய்யுங்கள. தனிதனியாகவோ மொத்தமாகவோ பாடலை தேர்வு செய்யுங்கள். கன்வர்ட் கிளிக்செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில உள்ள செட்டிங்ஸை கிளிக்செய்வதன் மூலம் வேண்டிய வசதியினை பெற்று பயனடையலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...