Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.

கணினியில் ஸ்கிரின்ஷாட் எடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்த இணையதளம் http://floomby.com/ செல்லவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் செய்துகொள்ளுங்கள்..
 புகைப்படமானது JPEGஅல்லது  PNG என எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். புகைப்படத்தின் தரத்தினை முடிவுசெய்திட இதில் உள்ள ஸ்லைட் பாரினை நகர்த்திகொள்ளவும்.
புகைப்படம் தேர்வு செய்ததும் உங்களுக்கு விண்டோ திறக்கம் அதில் புகைப்படத்தின் கீழே டூல்கள் நிறைய கிடைக்கும் தேவையான டூல்களை பயன்படுத்தி தேவையான வசதியினை நாம் பெறலாம். பின்னர் நீங்கள் படத்தினை சேவ் செய்து கணினியில் பாதுகாக்கலாம். தேவைப்படும் சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க


உங்களிடம் ஜாதகம் இருந்தால் அதில் உள்ள கட்டங்களின் கிரகங்களை சரிபாரப்பதற்கும் புதியதாக ஜாதகம் எழுதுவதாக இருந்தாலும் இந்த இணையதளம் உதவி செய்கின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
 இதில் நீங்கள் பிறந்த ஊர் குறிப்பிடவும். தமிழ்நாடாக இருந்தால் நீங்கள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரத்தை குறிப்பிடலாம். அல்லது உங்கள் ஊரின் சரியான அட்சரேகை,தீர்க்கரேகை தெரிந்தாலும் குறிப்பிடலாம்.அதுபோல நீங்கள் பிறந்த நேரத்தினை குறிப்பிட்டு இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும்.
 சிலநொடிகளில் உங்கள் ராசி.நட்சத்திரம்.உங்கள் லக்னம்.மற்ற கிரக நிலைகள் ஆகிய விவரங்கள் வலதுபக்க விண்டோவில் கிடைக்கும்.

இடது பக்கம் உங்களுக்கான ஜாதக கட்டம் விரிவாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் நமக்கு தேவையான விவரங்களை பிரிண்ட் கூட எடுத்துவைத்துக்கொள்ளலாம். இந்த தளம் ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தாலும் நிறைய நண்பர்கள் இந்த வசதியை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நினைவுப்படுத்தவே இந்த பதிவு..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...