சில வருடங்களுக்கு முன் பிரிக் கேம் என்று பிரபலமான விளையாட்டு இருந்தது. வீடியோ கேமில் வரும் செங்கல் கட்டங்களை வரிசையாக சேர்க்கவேண்டும்.வீடியோ கேமில் விளையாடிய நாம் இனி கம்யூட்டரில் நாம் விளையாடி பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் உள்ள Bricklayer Preferences கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான ஆப்ஸனை கிளிக் செய்து ஓ.கே. தரவும்.கேமில் வரும் லெவலை நாம் தேர்வு செய்யலாம். இதில் உள்ள Options கிளிக் செய்து Start At Level தேர்வு செய்யலாம்.
இதில் உள்ள கட்டங்கள் நீங்கள் பூர்த்தி செய்ததும் விளையாட்டு முடிவுக்கு வரும். பின்னர் அதில் உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
சிறியவர்கள் மட்டும் அல்ல - பெரியவர்களும் இதனை விளையாடலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.





