Showing posts with label velan.election.வேலன்.எலெக்ஷன்.ஒட்டு.. Show all posts
Showing posts with label velan.election.வேலன்.எலெக்ஷன்.ஒட்டு.. Show all posts

வேலன்-வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.துபாயில் வேலை செய்யும் ஒருவருக்கு சைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காள என்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. துபாயில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.

தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...