Showing posts with label velan.photo.photo print. Show all posts
Showing posts with label velan.photo.photo print. Show all posts

நமது புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட

நமது புகைப்படத்தை போஸ்டர்சைஸில்

நமது பிரிண்டரிலே யே அச்சிட


உங்கள் ஆதரவுடன் 75 வது பதிவு





நமது படத்தை போஸ்டர் சைஸில் அச்சடிக்க

நம்மிடம் சிறந்த படங்கள் இருக்கும். அதை

மிக பெரியதாக ஆக்க விரும்புவோம். ஆனால்

நம்மிடம் அதிகபட்சமாக A4 பேப்பர் சைஸில்

அச்சடிக்கும் பிரிண்டர்தான் இருக்கும். அதை

வைத்து மிக பெரிய பிரம்மாண்டமான

போஸ்டர் எப்படி அச்சடி்ப்பது? அதற்கு தான்

இந்த இலவச சாப்ட்வேர் உதவுகிறது.

இதை முதலில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்

கொள்ளுங்கள்.

நேரடியாக தளத்தில் இருந்து பதிவிறக்கம்


பதிவிறக்கம் செய்ததை 4Shared.com மூலம்


பின்னர் அந்த சாப்ட்வேரை

ஓப்பன் செய்கையில் உங்களுக்கு இந்த

பக்கம் ஓப்பன் ஆகும்.



அதில் உள்ள மொழியை தேர்வு செய்யவும்.

தமிழைதவிர இதர மொழிகள் உள்ளது. நாம்

ஆங்கிலத்தை தேர்வு செய்வோம்.


அடுத்து நாம் தேர்ந்தேடுப்பது Text.

இதில் மொத்தம் நான்கு பெட்டிகள்

உள்ளது. இதில் உள்ள பெட்டியில்

நாம் விரும்பும் வார்த்தைகளை சேர்க்கலாம்.



எழுத்துருக்களின் அளவையும் நிர்ணயிப்பதோடு

அல்லாமல் இடத்தையும் நிர்ணயிக்கலாம்.

அடுத்து Font. இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு

குறியை தேர்வு செய்தால் உங்களிடம் உள்ள

பாண்ட்கள் தேர்வாகும். உங்களிடம் தமிழ்

பாண்ட் இருந்தால் அதையும் தேர்வு செய்யலாம்.

மேலும் அதில் உள்ள More கிளிக் செய்தால்

உங்களுக்கு கீழ்கண்ட் சாளரம் ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் Text -ன் அளவு -இடைவெளி-படத்தில்

இடம்பெற வேண்டிய பகுதி மற்றும் Text -ன் நிறத்தையும்

Shadow Color-ஷேடோ கலரையும்,Background-

பின்புற நிறத்தையும் தேர்வு செய்யலாம்.

நீங்கள் செய்கின்ற மாற்றங்களை உடனுக்குடன்

இதில் உள்ள Apply பட்டனை


தேர்வுசெய்து பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்து உள்ளது Photo. இதில் உங்கள் கணிணியில்

உள்ள டிரைவில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை

தேர்வுசெய்துகொள்ளவும்.




அடுத்து அதில் உள்ள More கிளிக் செய்தால் உங்களுக்கு

இந்த சாரளம் ஓப்பன் ஆகும்.


இதில் நீங்கள் புகைப்படத்தின் அளவு மற்றும்

திசைகளையும் தேர்வு செய்துகொள்ளலாம்.

அடுத்து உள்ளது Border. புகைப்படத்தின் வெளிப்புறம்

வரவேண்டிய பார்டரின் வகைகளை உங்கள்

விருப்பபடிதேர்வு செய்யுங்கள்.


பார்டரின் அளவுகளையும் லைன்(Line) கலரையும்

பின்புற நிறத்தையும்(Background) தேர்ந்தேடுங்கள்.

இறுதியாக இருப்பது Size ஆகும்.இதில் முதலில்

நீங்கள் பிரிண்ட் செய்யவிருக்கும் பேப்பரின்

அளவை தேர்ந்தெடுங்கள்.



நான் A4,210x297 mm அளவு பேப்பரை தேர்ந்தேடுத்துள்ளேன்.

அடுத்து உங்கள் புகைப்படம் நீளவாக்கிலா (அ) அகல

வாக்கிலா என தேர்வுசெய்யுங்கள்.

நீங்கள் அகலவாக்கில் தேர்வு செய்தால் இதில்

உள்ள width அளவு அதிகமாகவும் நீளவாக்கில்

தேர்வு செய்தால் Hight அளவு அதிகமாகவும்

தேர்வு செய்யுங்கள். போஸ்டருக்கென சில

அடிப்படை அளவுகள் உள்ளது. அதாவது

3x2, 3x4,6x4,8x6,12x8,15x12,15x10,12x18,12x24

போன்ற அளவுகள் உள்ளது.இந்த அளவுகளில்

நாம் போட்டோவை பெரியதாக போட்டால்

தான் போஸ்டர் அழகாக இருக்கும்.

இதில் உள்ள Width மற்றும் Hight அளவுகளில்

நீங்கள் விரும்பிய அளவை கொடுக்கவும்.

இதில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்து

பக்கத்தில் உள்ள பிரிவியு பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு வலப்புறம் நீங்கள்

விரும்பிய போஸ்டர் இருக்கும்.




இதில் Num கீழ் அம்புக்குறி இருக்கும். இதில் தேர்வு

செய்யும் பாகமானது வலப்புறம் கீழே தெரிய

ஆரம்பிக்கும். இதில் நீங்கள் விரும்பிய அளவில்

பெரிதுபடுத்தி பார்க்கலாம்.



அனைத்து மாற்றங்களும் செய்து முடித்ததும் நீங்கள்

உங்களுடைய பெயரை சேர்த்து பிரிவியு பார்க்கலாம்.

இந்த சாப்ட்வேரில் நீங்கள் போஸ்டர் ஓட்ட ஏதுவாக

ஒவ்வொறு துண்டுகளின் இடையே இடைவெளி

இருப்பது இந்த சாப்ட்வேரின் சிறப்பாகும். இதனால்

நமது புகைப்படமானது இடைவெளியில்லாமல்

போஸ்டரில் அழகாக இருக்கும்.



இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது

உங்கள் புகைப்படத்தின் ரெசுலேசனை அதிக படுத்தி

பிரிண்ட் போடவும்.சுமார் 450 முதல் 600 வரை

ரெசுலேசனை தேர்வு செய்யலாம். பெரியதாக படம்

வர அழகாக இருக்கும்.(ரெசுலேசனை பற்றி

போட்டோஷாப் பாடத்தில் பின்னர்

பதிவிடுகின்றேன்).

இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டுபோடவும்.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

உங்கள் மேலான ஆதரவுடன் இது எனது

75 வது பதிவாகும்.

இதுவரை வந்துள்ள 9200 பார்வையாளர்

களுக்கும் எனக்கு ஆதரவு தரும் பின் தொடர்

பவர்கள் 37 நண்பர்களுக்கும்

சிறந்த கருத்துக்களை வழங்கும் கருத்துரை

யாளர்களான நண்பர்களுக்கும்

என் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து உங்கள் ஆதரவுடன்

வாழ்க வளமுடன்:,

வேலன்.







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...