Showing posts with label velan.tricks.game.memory.memory game.children.kids.games.வேலன்:-சின்னப்புள்ளதனமாஇல்ல இருக்கு. Show all posts
Showing posts with label velan.tricks.game.memory.memory game.children.kids.games.வேலன்:-சின்னப்புள்ளதனமாஇல்ல இருக்கு. Show all posts

வேலன்:-சின்னப்புள்ளதனமாஇல்ல இருக்கு

நாம் நிறைய தெரிந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஒரு சின்ன விஷயத்தில் நாம்

ஏமாந்து விடுவோம். பின்னால் தான்

அட இதுதானா என யோசிப்போம்.

இந்த பதிவில் கொடுத்துள்ள விவரங்களை

உங்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

எத்தனை பேர் சரியான விடை சொல்கின்றார்

கள் என பாருங்கள்.சரியான விடை சொன்னால்

அவர்களை புத்திசாலி என பட்டம்கொடுங்கள்.

விடை தவறாக சொன்னால் அதிபுத்திசாலி

என பட்டம் கொடுங்கள். (அடுத்தது ஒரு பெரிய

பதிவு. அதற்கு தயார் செய்யவேண்டியுள்ளதால்

அதை பதிவிடுவதற்குள் ஒரு சின்ன

பதிவு பொடலாம் என இதை பதிவிடுகின்றேன்.

மொக்கையென்றும் வைத்துக்கொள்ளலாம்)

இனி பதிவிற்கு செல்லலாம்.

ஒரு சின்ன மனக்கணக்கு:-

ஐந்நூற்று பதினைந்தும் ஐந்நூற்றுப்

பதினைந்தும் எவ்வளவு?

ஆயிரத்து முப்பது வருகின்றதா?

இப்போது ஆயிரத்து முப்பதுவுடன்

இன்னும் ஒரு ஆயிரத்து முப்பது

சேர்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டாயிரத்து அறுபது வருகின்றதா?

அடுத்து அதனுடன் ஒரு முப்பது

கூட்டிக்கொள்ளுங்கள்.

இரண்டாயிரத்து தொன்னூறு வருகின்றதா?

சரி ...கடைசியாக அதனுடன் ஒரு

பத்தை கூட்டிக்கொள்ளுங்கள்.

விடை என்ன வருகின்றது?
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v

நீங்கள் சொல்லும் விடை 3000 என்றால்

நீங்கள் அதிபுத்திசாலி....

விடை 2100 என்றால் நீங்கள்

புத்திசாலி...

அடுத்த கணக்கு்-

தொள்ளாயிரம் பெரியதா -

எட்டாயிரம் பெரியதா ...?

உங்களது விடை:-

தொள்ளாயிரமாயிருந்தால்

நீங்கள் அதிபுத்திசாலி..

எட்டாயிரமாயிருந்தால்

நீங்கள் புத்திசாலி...

நான் சொல்வதையெல்லாம்

திரும்ப சொல்லவேண்டும்.

ஒரு ஊரில்.....

ஒரு ஊரில்.....

ஒரு ராஜா....

ஒரு ராஜா....

அந்த ராஜாவிற்கு

அந்த ராஜாவிற்கு

ஒரு ராணி.....

ஒரு ராணி.....

அந்த ராணிக்கு

அந்த ராணிக்கு

ஏழு பசங்க.....

ஏழு பசங்க....

எத்தனை பசங்க...?

உங்களது விடை:-

ஏழு பசங்க என்றால் நீங்கள்

அதிபுத்திசாலி....

எத்தனை பசங்க...? என்றால்

நீங்கள் புத்திசாலி....

கடைசியாக ஒன்று:-

ஊமை உங்களிடம் தண்ணீர்

வேண்டும் என்றால் எப்படி

கேட்பார்?

பதி்ல்:-கையை மடக்கி

வாய்அருகே

தண்ணீர் குடிப்பது போல்

கை ஜாடையில் காண்பிப்பார்.

சரி ஒரு குருடன் கத்தரிக்கோல்

வேண்டும் என்றால் எப்படி

கேட்பான்?

உங்களது விடை:-

கையில் ஆள்காட்டிவிரலை

யும் நடுவிரலையும் கத்தரிக்கோல்

போல் கட்செய்து காண்பித்தால்

நீங்கள் அதிபுத்திசாலி.

கத்தரிக்கோல் கொடுங்கள் என

வாய்திறந்து கேட்டால் புத்திசாலி.

பதிவை பாருங்கள்....

நிச்சயம் ஒட்டுப்போடமாட்டிர்கள்.

இந்த கேள்விகளையெல்லாம்

உங்கள் நண்பர்கள் - உறவினர்களிடம்

கேட்டுப்பாருங்கள். அவர்களில்

எத்தனைபேர் புத்திசாலி- அதிபுத்திசாலி

என கண்டுக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

புத்திசாலி-அதிபுத்திசாலிகள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...