Showing posts with label velan.video combiner.video.வேலன். தமிழ்.வீடியோ.இணைக்க.. Show all posts
Showing posts with label velan.video combiner.video.வேலன். தமிழ்.வீடியோ.இணைக்க.. Show all posts

வேலன்:-வீடியோ பைல்களை ஒரே பைலாக இணைக்க -MP3 ToolKit-Video Combiner.

வீடியோ பைல்களை இணைத்து ஓரே வீடியோ பைல்களாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்ககம் செய்யவும் இதன் இணையதளம் செல்லவும் இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 டிராக் அன்ட் டிராப் முறையிலோ அல்லது பைலினை தேர்வு செய்தோ வீடியோ பைல்களை இணைக்கவும்.பைல்கள் எந்த ஒரு பார்மெட்டிலும் இருக்கலாம் இந்த மென்பொருள் அதனை ஏற்றுக்கொள்ளும்.
மாற்றவேண்டிய வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்திடவும். 
 வீடியோ ப்ரேம் அளவினை தேர்வு செய்திடவும்.
 வீடியோ பைல்களை சேர்க்கவும். நீக்கவும் முன்பின் அமைக்கவும இதில் வசதி கொடுத்துள்ளார்கள் தேவையான டேபினை கிளிக் செய்வதன் மூலம் அந்த வசதியினை நாம்பெறலாம்.
 அனைத்து பணிகளும் முடிந்ததும் இதன் கீழே உள்ள Combine Videos Now என்கின்ற டேபினை கிளிக் செய்யவும். 
 தேர்வு செய்யப்பட்ட வீடியோக்கள் இணைவதனை இதில் உள்ள ஸ்டைர் பச்சை நிறத்தில் மாறுவது மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியொக்கள் இணைந்து ஒரே வீடியோ பைலாகவும் நீங்கள் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய அளவிலும் இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...