Showing posts with label velan.video.photo.cd.வேலன்.வீடியோ.போட்டோ.சிடி.. Show all posts
Showing posts with label velan.video.photo.cd.வேலன்.வீடியோ.போட்டோ.சிடி.. Show all posts

வேலன்:- மூவி கிரியேட்டர்.

நம்மிடம் உள்ள புகைப்படங்கள் வீடியோபடங்களை நாம் விருப்பபடி ஆடி யோ மற்றும் டிரான்ஸ்செக்ஷன் சேர்த்து மூவி கிரியேட் செய்ய  இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Photo/Video Library.Audio library,Transtions என மூன்றுவிதமான டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.இதில் முதலில் உள்ள Photo/Video Library என்பதனை கிளிக் செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் கிடைக்கும். இதனை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து வலதுபுறத்தில் கீழே உள்ள விண்டோவில்  விடவும்.

இப்பாது உங்களுக்கு மேற்கண்டவாறு டிஸ்பிளே ஆகும்.இதில் நமது புகைப்படங்கள் டைம் லைனில் டிஸ்பிளே ஆகும. இதில மூன்று விதமான காலங்கள் கொடுத்துள்ளார்கள். டெக்ஸ்,டிரான்ஸ்சிக்ஸன்.ஆடியோ என உள்ளது. இதில் உள்ள டெக்ஸ்ட் கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமக்கான வார்த்தையை தட்டச்சு செய்து புகைப்படத்தில்எந்த இடத்தில் வார்த்தை வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். மேலும் பாண்ட்களையும் தேர்வு செய்யவும். பின்னர் பாண்ட்களுக்கு தேவையான நிறத்தினையும் தேர்வு செய்யவும். இறுதியாக ஓ.கே.தரவும்.
அடுத்த தாக உள்ள டிரான்ஸ்சிஸன் தேர்வு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் விதவிதமான டிரான்ஸ்சிஸன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையாதை தேர்வு செய்ய நமக்கு ஒவ்வாரு எபெக்ட்களும் நமக்கு டிஸ்பிளே ஆகும்.

இதில் அடுத்த்தாக உள்ள ஆடியோ தேர்வு செய்து நமது கணிணியில் உள்ள ஆடியோவினை தேர்வு செய்யவும். இப்பாது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பாடலுக்கு தேவையான இடத்தினை தேர்வு செய்துகாள்ளலாம்.

 அனைத்து பணிகளும் முடிந்த்தும் நீங்கள் இதில் மேற்புறம் உள்ள பைலில் Save Us Video கிளிக் செய்து வரும் விண்டோவில் எந்த பார்மெட் வேண்டுமா அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.



தேவையாதை தேர்வு செய்தபின் இதில் உள்ள Go  கிளிக் செய்யவும. இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.

இறுதியாக உங்களுக்கான மூவி வீடியோ ஆனது  நாம் தேர்வு செய்த இடத்தில் சேமிப்பாக மாறியிருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன
 வேலன்.
பின்குறிப்பு:- எனது பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசியிலும் பிளாக்கின் மூலமும் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 
வாழ்க வளமுடன் 
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...