Showing posts with label video animation. velan. Show all posts
Showing posts with label video animation. velan. Show all posts

வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர

அனிமேஷனை வீடியோவில் கொண்டுவருவது பற்றி இன்று பார்கக்லாம். அதற்குமுன் ராஜபார்வை படத்தில் கமலஹாசன் அவர்களின் இந்த வீடியோகிளிப்பி்ங்ஸ் பார்க்கவும்
அதைப்போலவே செய்யமுயற்சித்துள்ள படத்தை பாருங்கள்.
velan
இனி இதை எவ்வாறு செய்வது என்று பார்ககலாம். முதலில் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.அதை பென்சில் டிராயிங்காக மாற்றிக்கொள்ளுங்கள்.(புகைப்படத்தை பென்சில் படமாக மாற்றுவது பற்றி நான் ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.) 
நீங்கள் பென்சில் படமாக மாற்றிய அந்த புகைப்படத்தையே 10க்கும் மேற்பட்ட டுப்ளிகேட் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

 இப்போது முதல் புகைப்படத்தில் தலையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடங்களை ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

 அடுத்த புகைப்டம் எடுத்துக்கொண்டு தலையும் கழுத்தும் மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடங்களை அழித்துவிடுங்கள.

 இதைப்போலவே படத்தில் உள்ள உருவங்களில் ஒவ்வொரு இடமாக அழித்துகொண்டு அதை முறையாக வரிசை எண் கொடுத்து சேமித்து வாருங்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.

அடுத்த படம்-
அடுத்த படம் கீழே-
அடுத்த படம் கீழே-
இதையே நீங்கள் உல்டாவாகவும் செய்யலாம். முதல் படத்தை எடுததுக்கொண்டு அதில் ஒவ்வோரு இடமாக அழித்துவிட்டு சேமித்து வரலாம்.
ரைட். இப்போது நீங்கள் சேமித்து வைத்துள்ள புகைப்படங்களை ஏற்கனவே நான் பதிவிட்டதை பார்த்து அனிமேஷனாக மாற்றிக்கொள்ளுங்கள்.சேரிலிருந்து நீங்கள் எழுந்திருப்பது போல வீடியோவை எடுத்துகொண்டு அதற்கு முன் இந்த அனிமேஷனை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உருவம் சிறிது சிறிதாக வந்து பின்னர் அதிலிருந்து நீங்கள் எழுந்து வருவதாக படம் அமையும். (முதலில் உள்ள கமலஹாசன் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும்).இதை முயற்சித்துப்பார்க்க சற்று பொறுமை அவசியம்.நீங்கள் உங்கள் படம் -குழந்தைகள் -படத்தை இதுபோல முயற்சிசெய்து அனிமேஷன் வீடியோவாக அனுப்பி வையுங்கள். பதிவில் வெளியிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.பதிவின் நிளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...