Showing posts with label video.tutorial.photos.passport .. Show all posts
Showing posts with label video.tutorial.photos.passport .. Show all posts

வேலன்-போட்டோஷாப் -ஆக்ஷன் டூலை இணைப்பது எப்படி? வீடியோ செயல்முறையுடன்.

போட்டோஷாப் பதிவில் புதியவர்கள் நிறைய பேர்கள் ஆக்ஷன் டூலை எப்படி போ்ட்டோ ஷாப்பில இணைப்பது என்று கேட்டிருந்தார்கள. அவர்களுக்கு புரிவதற்காக படங்களுடனும் முதல்முறையாக வீடியோ டுடோரியலுடன் போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூல் இணைப்பது பற்றி பதிவிட்டுள்ளேன். முதலில் உங்களிடம் உள்ள போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள். அதன் மேல்புறம் உள்ள window வினை கிளிக் செய்யு்ஙகள்.அதில் உள்ள Action கிளிக் செய்யுங்கள் அல்லது கீ -போர்டில் Alt+9 கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட Action விண்டோ ஓப்பன் ஆகும். அதில வலதுபுறம் உள்ள சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். உங்கள் வசதிக்காக அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ளேன்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கீழாக உள்ள Load Action என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நீங்க்ள் நான் கொடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ள Action Tool  உள்ள இடத்தை தேர்வு செய்யுங்கள். நான் எடுப்பதற்கு வசதியாக Desktop -ல் வைத்துள்ளேன். கீழே உள்ள Load கிளிக் செய்யுங்கள்.
இப்போது ஆக்ஷன் டூலானது உங்களுக்கு ஆக்ஷன் விண்டோவில் வந்து அமர்ந்து கொள்ளும்.இப்போது மீண்டும் அந்த சிறிய முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் பட்டன் மோட் கிளிக் செய்யுங்கள்.
உங்களிடம் உள்ள ஆக்ஷன் டூல்கள் ஆனது பல நிறங்களில் மாறிவிடும். இப்போது ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள்.
ஆக்ஷன் டூலில் உள்ள பட்ட னில் நீங்கள் வீரும்பும் ஆக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படமானது சற்று நிறம் மாறி காணப்படுவதையும் அதன் மூலையில் சிறிய கட்டம் வந்துள்ளதையும் கவனியுங்கள்.
சிறிய கட்டமானது மூலையில் வந்துள்ளது தெரிகின்றதா? அதை கர்சர் கொண்டு இழுத்துவாருங்கள்.
படத் தில தேவையான அளவில் வைத்துக்கொண்டு பின்னர் என்டர் தட்டுங்கள்.
உங்களுக்கு தேவையான பாஸ்போர்ட் ரெடி...
படங்களில் விளக்கம் அளித்ததுபோல் வீடியோவிலும் செயல்முறை விளக்கம் அளித்துள்ளேன்.  இங்கு கிளிக் செய்து 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட வீடியோவினை பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும்..ஆக்ஷன் டூலை இணைப்பது பற்றி நன்கு கவனித்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த அடுத்த பதிவில் உங்களுக்கு ஆக்ஷன் டூல்கள் இணைப்பது சுலபமாக இருக்கும்.பதிவுகளை பாருங்கள். கரு்த்துக்களை கூறுங்கள். 


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...