
நாம் வேர்டில் ஒரு நீண்ட கடிதம் எழுதுகின்றோம்.

சுமார் 15 பக்கங்களுக்கு அந்த கடிதம் செல்கின்றது
என வைத்துக்கொள்வோம். அதில் முதல் பக்கத்தில்
உள்ளதையும் ஏழாவது பக்கத்தில் உள்ளதையும்
ஒரே சமயத்தில் பார்த்து திருத்தங்கள் செய்வதானால்
என்ன செய்வோம். ஒவ்வொரு பக்கமாக
சென்று பார்க்கவேண்டும். ஆனால் நீங்கள்
விண்டோவை ஸ்பிட் செய்து விட்டீர்களே
யானால் சுலபமாக திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
மீ்ண்டும் பழையபடி கொண்டுவந்து விடலாம்.
அதை இரண்டு வழிகளிலும் - இரண்டு பதிப்பு களிலும்
(வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2007 )
எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம்.
முதலில் உங்கள் கடிதத்தை தயார் செய்து
கொள்ளுங்கள்.
வேர்ட் 2003 உபயோகிப்பவர்களுக்கு:-

டூல் பாரில் உள்ள விண்டோ வில் உள்ள Split
கிளிக் செய்தால் விண்டோதிரை இரண்டாக பிரியும்.
திரை இரண்டாக பிரிந்துவிட்டதை கீழே உள்ள படத்தில்
பாருங்கள்.
தேவையான திருத்தங்கள் செய்ததும் மீண்டும்
ஒரே விண்டோவாக மாற்ற டூல்பாரில் உள்ள
விண்டோ வை பாருங்கள்.

ரிமுவ் ஸ்பிலட் இருக்கின்றதா .அதை கிளிக்
செய்யுங்கள். விண்டோ ஒன்றாகிவிடும்.
வேர்ட் 2007 உபயோகிப்பவர்களுக்கு:-
வேர்ட் 2007 -ல் உள்ள டாக்குமெண்ட் . அதை
இரண்டாக பிரிப்பதை பார்க்கலாம்.
டூல்பாரில் உள்ள வியு சென்று split window
கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்

விண்டோ திரை இரண்டாக பிரிந்ததை கீழே காணலாம்.
இப்போது வேண்டிய மாற்றங்கள் செய்ததும் மீண்டும்
பழையவாறு கொண்டுவந்து விடலாம்.
விண்டோதிரை பிரிப்பதை இன்னும் ஒரு வழியிலும்
செய்யலாம். நீங்கள் பணிபுரியும் விண்டோவின்
பக்கத்தில் நீளவாக்கு ஸ்கோரல் பார் இருக்கும்.
அதன் மேற்புறம் உள்ள அம்புக்குறியின்
மேல் பார்த்தீர்களேயானால் இரண்டுகோடுகள்
ஒன்றன்மீது ஒன்று அடுக்கிவைத்ததுபோல்
இருக்கும். அதை மவுஸால் இழுத்துவந்து
விண்டோவின் நடுவில் வைத்து கிளிக் செய்தால்
விண்டோதிரை இரண்டாக பிரிக்கப்படும்.
வேலை முடிந்ததும் மீண்டும் அதன்மீது
மவுஸ் கர்சர் வைத்து கிளிக் செய்தால்
திரை ஒன்றாகிவிடும்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
ஒட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.
விண்டோ திரையை இரண்டாக இதுவரை
பிரித்து பார்த்தவர்கள்:-