நமது தலையெழுத்தை மாற்ற முடியாது..ஆனால் நாம் உபயோகிக்கும் கம்யூட்டரின் டிரைவ் எழுத்துக்களை மாற்றலாம்..D.E.F.G.H.I...... என எத்தனை Drive -டிரைவ் உள்ளதோ அத்தனை எழுத்துக்களையும் நாம் நமது விருப்பமானபடி மாற்றிக்கொள்ளலாம். முதலில் My Computer -ல் ரைட் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Manage என்பதனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Disk Management என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரிசையாக உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும். அதில் எந்த டிரைவ் பெயரை மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த டிரைவை தேர்வு செய்யுங்கள்.பின்னர் அதில் ரைட் கிளி்க் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Change Drive Letter and Paths ...என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Change என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரிசையாக ஆங்கில எழுத்துக்கள் இருக்கும். அதில் எந்த எழுத்து உங்களுக்கு தேவையோ - எந்த எழுத்து உங்கள் ஃபவரைட்டோ அதை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள்.. உங்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி வரும்.
Yes கொடுங்கள்.உங்கள் விருப்பமான டிரைவ்வுக்கு விருப்பமான எழுத்துக்கள் கொடுத்தாகி விட்டது. இதில் முக்கியமான C -டிரைவ் எழுத்தை மட்டும் மாற்றமுடியாது.ஏன் என்றால் அது கம்யூட்டரின் தலையெழுத்து அதை மாற்ற முடியாது.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா...இந்த பூனைக்கு சிக்கன் -65 வேண்டுமாம்...!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்











