வேலன்:-இலவசமாக பைல்களை பகிர்ந்துகொள்ள


<span title=


நம்மிடம் உள்ள பைல்கள், சாப்ட்வேர்கள்,பாடல்கள்,வீடியோக்கள்,
போட்டோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள விரும்பு
வோம். ஆனால் மெயிலில் அனுப்பினால் சுமார் 25 எம்.பி.
அளவிற்கே அனுப்ப முடியும். ஆனால் இந்த 4Shared.com மூலம்
நாம் சுமார் 100 எம்.பி. அளவு பைல்களாக 5 ஜி.பி. வரை அனுப்ப
முடியும்.நம்மிடம் உள்ள முக்கிய பைல்களை இங்கு சேமித்து
வைக்கலாம்.சரி- இனி இதில் கணக்கு ஒன்றை துவக்கி எப்படி
உபயோகிப்பது என பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள GET 5 GB OF FREE SPACE கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்கள் இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
பாஸ்வேர்ட் கொடுங்கள். மற்றும் ஒரு முறை பாஸ்வேர்ட்
கொடுங்கள். இதில் உள்ள இலவசம் என்பதை தேர்ந்தேடுங்கள்.
கீழே உள்ள Sign Up கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்
உள்ள ஓ.கே. கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.அதே சமயம்
உங்கள் இ-மெயில் முகவரிக்கு இ-மெயில் ஒன்று வந்திருக்கும்.
இதில் கீழ்புறம் உள்ளChoose file கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்ந்தெடுத்து
கிளிக் செய்யுங்கள்.அடுத்து கீழ் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.

இதில் உள்ள கட்டத்தில் பார்த்தீர்களேயானால்
பச்சைநிற கட்டங்கள் வருவதை காணலாம்.பைல் Upload
ஆகி முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Done கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.

இதில் உள்ள Download கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன ஆகும்.

அவ்வளவு தான். இப்போது இதில் உள்ள URL காப்பி செய்து
உங்கள் நண்பருக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வையுங்கள்.
அதை பெறும் உங்கள் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்தால்
அவர்கள் அந்த பைலை சுலபமாக பெறலாம். பாடல்கள்
அனுப்பும் போதும்,சாப்ட்வேர்கள் அனுப்பும் போதும் அதை
ஜிப் -பைலாக அனுப்பினால் பெறுவதும் உபயோகிப்பதும்
மிக சுலபம்.

1 G.B.வரையில் உள்ள பைல்கள்,போட்டாக்கள்,வீடியோ
படங்களை ஒரே முறையில் அனுப்புவது பற்றி அடுத்து
பதிவிடுகின்றேன்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.
விருது வழங்குகின்றார்கள். உங்கள் ஓட்டை மறக்காமல் இங்கு
போடவும். பதிவினை காண இங்கு கிளிக் செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இலவச பைல்களை இதுவரை பகிர்ந்துகொண்டவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...