வேலன்:-வீடியோ ஆய்வாளர்(Video Inspector)


வீடியோ ஆய்வாளர் என்றதும் என்னவோ என நினைக்க
வேண்டாம். இது நமது வீடியோவை சோதனை செய்து
குறைகளை களையும் இன்ஸ்பெக்டர்.. நம்மிடம் உள்ள
வீ்டியோ பைல்களை சோதனைசெய்து அதில் உள்ள
கூடுதல் விவரங்களை இந்த வீடியோ இன்ஸ்பெக்டர்
சாப்ட்வேர் தருகின்றது.நம்மிடம் சில வீடியோ பைல்
இருக்கும். சமயத்தில் அது ஓப்பன் ஆகாது. ஒப்பன் ஆனாலும்
ஆடியோ ஒலிக்காது. சமயத்தில் ஆடியோ ஒலிக்கும் -
வீடியோ வராது.இந்த குறை ஏன் ஏற்படுகின்றது என
இந்த சாப்ட்வேர் ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்கின்றது.

நம்மிடம் உள்ள வீடியோ ஓடும் நேரம்-அதன் ஸ்டிரீம்ஸ்
விவரங்களை இந்த சாப்ட்வேர் தருகின்றது. ரெசுலேஷன்,
பைரேட்,ஒரு செகண்ட்டில் ப்ரேம் நகரும் வேகம் போன்றவற்றை
வீடியோ ஸ்ட்ரீமுக்கும் பைரேட்,நம்பர் ஆப் சேனல் விவரங்களை
ஆடியோ ஸ்ட்ரீமுக்கும் தருகின்றது.
மேலும் நமது கணிணியில் உள்ள கோடக்குகள் என்ன என்ன -
இந்த வீடியோ ஓட என்ன என்ன கோடக்குகள் தேவை என்பதை
இந்த சாப்ட்வேர் சோதித்து அந்த கோடக்குகள் இன்டர்நெட்டில்
இருந்து டவுண்லோடு செய்கின்றவசதியையும் இந்த
சாப்ட்வேர் தருகின்றது.ஏவிஐ, எம்பிஜி-1 எம்பிஜி-2 மற்றும்
குயிக்டைம் வீடியோ பார்மட்டுகளை இந்த சாப்ட்வேர்
திறம்பட கையாளும்.இந்த சாப்ட்வேர் 2.5 எம்.பி. அளவு
கொள்ளளவு கொண்டது.சரி..சரி...இந்த சாப்ட்வேர்பற்றிய
சுயபுராணம் போதும் என்கின்றீர்களா?....ரைட் இப்போது
இந்த சாட்டவேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.

இதை ரன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும். நான் என்னிடம் உள்ள வீடியோபைலை
தேர்வு செய்துள்ளேன்.


இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தியதும் எனக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகியது.

என்னிடம் உள்ள வீடியோவிற்கான கோடெக் இல்லை. இப்போது
வீடியோ கோடக் கீழ் பாருங்கள். டவுண்லோடு என்பதை
கிளிக் செய்யுங்கள். இப்போது எனக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகியது.

இதில் என்னிடம் இல்லாத கோடக் பைலை டவுண்லோடு
செய்தேன்.

டவுண்லோடு ஆக்ஸிலேட்டர் மூலம் டவுண்லோடு ஆகியது.
படம் கீழே:-

இப்போது எனது வீடியோ வை பிளே செய்ய தொந்தரவு
செய்யாமல் ஒடியது. படம் கீழே:-

ஆடியோ பைல்களையும் இதுபோல் நிவர்த்தி செய்து
கொள்ளலாம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


சற்றுமுன் கிடைத்த தகவல்:-

தஞ்சாவூரில் உள்ள தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில்-அங்கு அவர்கள்
சேமித்துவைத்து உள்ள சுவடிகளில்
இருந்து தயாரித்த புத்தகங்களை 50 % விலையில்
வரும் 31.10.2009 வரை விற்கின்றார்கள். ஜோதிடம்,
மருத்துவம், மூலிகை, சமையல் முதல்கொண்டு
அனைத்து நூல்களும் கிடைக்கும்.தேவைப்படுவபர்கள்
அங்கு சென்று வாங்கி கொள்ளலாம்.


இன்றைய பதிவிற்கான PSD பைல்:-







டிசைன்செய்தபின் வந்தபடம் கீழே:-


இந்த பைலை டவுணலோடு செய்ய இங்கு
கிளிக்
செய்யவும்.




இதுவரை வீடியோ இன்ஸ்பெக்டரை உபயோகித்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

பொன் மாலை பொழுது said...

மாப்ள, உங்களிடமிருந்து எந்த செய்தி வந்தாலும் அது நிச்சயம் பிறருக்கு பயன்படும் ஒன்றாக வே இருக்கிறது. இதுவும் அதுபோல ஒரு பயனுள்ள பதிவே! தெழில் நுட்பம் பகுதியில் உங்களின் பதிவு சிறந்த சில பதிவுகளில் ஒன்று. வாழ்த்துக்கள்.

யூர்கன் க்ருகியர் said...

Plz check

http://www.divx-digest.com/software/nimo_pack.html

grginபக்கங்கள் said...

தங்களது பக்கத்தில் பயனுள்ள தகவல்கள் நிறைய தருகின்றீர்கள். நன்றி நன்றி.
ஜிஆர்ஜி
புதுவை.

Thomas Ruban said...

நல்ல உபோயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி சார்..

Muthu Kumar N said...

வேலன் சார்,

எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய நல்ல தகவல். வளர்க உங்கள் பணி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள, உங்களிடமிருந்து எந்த செய்தி வந்தாலும் அது நிச்சயம் பிறருக்கு பயன்படும் ஒன்றாக வே இருக்கிறது. இதுவும் அதுபோல ஒரு பயனுள்ள பதிவே! தெழில் நுட்பம் பகுதியில் உங்களின் பதிவு சிறந்த சில பதிவுகளில் ஒன்று. வாழ்த்துக்கள்//

நன்றி மாம்ஸ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
Plz check

http://www.divx-digest.com/software/nimo_pack.html//

புதிய லிங்க் கொடுத்தமைககு நன்றி நண்பர் யூர்கன் க்ருகியர் அவர்களே..

வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

raja கூறியது...
தங்களது பக்கத்தில் பயனுள்ள தகவல்கள் நிறைய தருகின்றீர்கள். நன்றி நன்றி.
ஜிஆர்ஜி
புதுவை//

தொடர்ந்து கருத்துக்களை அளித்துவருகின்றீர்கள்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
நல்ல உபோயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி சார்.ஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்பர் தாமஸ் ரூபன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய நல்ல தகவல். வளர்க உங்கள் பணி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Anonymous said...

What very good question

Related Posts Plugin for WordPress, Blogger...