வேலன்:-இன் மை டைரி (In My Diary)

விதவிதமான டைரிகள் விற்பனைக்கு வருவதுபோல விதவிதமான டைரிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பல வசதிகளை தருகின்றது. 6 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் டைரி - நமக்கு கிடைக்கும். அதில் தேவையான குறிப்புகளை குறித்து வைக்கலாம்.
 காலண்டரை கிளிக் செய்ய நமக்கு காலண்டர் கிடைக்கும். அதில் உள்ள + மற்றும் - குறிகளை அழுத்த காலண்டர் முன்தேதியிலும் பின்னர் வரும் தேதிகளும் கிடைக்கும்.
 இதில் இடது புறம் Notes,Contact கிடைக்கும். தேவையான விவரங்களை நாம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவரின் தொலைபேசி விவரம் முதற்கொண்டு முழுவிவரம் இதில குறித்துவைக்கலாம்.
இதிலேயே அலாரம் செட் செய்யும் வசதியும் உள்ளது:. பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களையும் இதில் குறித்துவைக்கலாம்.இதுநாள் வரை பிறந்தநாளோ -திருமணநாளோ-எவ்வளவு வருடம் இதுவரை கடந்துள்ளது என்கின்ற விவரமும் கிடைக்கும். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

பால கணேஷ் said...

அருமை! டைரி எழுதுவதற்குப் பதிலாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். அதுவும கான்டாக்ட் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் போட்டு வெச்சுக்கறது நல்ல வசதி! நன்றி நண்பா!

Related Posts Plugin for WordPress, Blogger...