வேலன்:-மின்கட்டண அட்டவணை.

மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)

கடைகளுக்கானது:-

1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உங்களுக்கான அட்டவணை கீழே:-

வீடு இணைப்புக்கானது.
கடை இணைப்புக்கானது.எனது கருத்து:-
நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்.
தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

35 comments:

Anonymous said...

பயனுள்ள பதிவு

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சொல்லும் கணக்குக்கான அடிப்படை கால அளவு ஒரு மாதம்தானே?

ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதானெடுக்கிறார்கள். அப்போது ஸ்லாப் அதற்கேற்றாப்போ மாறுவதாக தெரியவில்லையே?

இரண்டு மாதத்துக்கு 500 யூனிட்டுகள் என்றால் மாதத்துக்கு 250 என்றுதானே கொள்ள வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

sakthi said...

மின் அதிர்ச்சி பதிவு அண்ணா ,
தலையே சுத்துது .

மென்பொருள் பிரபு said...

There is a idea forming "Tamil kanini writers association". This is to improve our bargainig skills on rates. Do you want to join?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது தலைவரே...

சிந்திப்பவன் said...

@DONDU:
மின்கட்டண அட்டவணை இரு மாதத்திற்கான பயன்பாட்டிற்கு ஆவது.

வேலன் சொல்லவருவது என்னவென்றால் ஒருவர் இருமாத பயன்பாடு 200 க்கு அருகாமையில் இருந்து அதை அவர் 200 க்கு கீழ் கொண்டுவந்தால் ( EVEN 199 IS OKAY)அவருக்கு சேமிப்பு அதிகம்.(அதே போலத்தான் 400 யூனிட் இரு மாதத்திற்கு நுகர்வோர்களும்)
வேலனுக்கு என் மனமார்ந்த நன்றி..

கவிதை நாடன் said...

thagavalukku nandri sagothara..inimey naama currentey illaama thaan vaalanum pola

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வேலன்,
தற்போதைய சூழலுக்கேற்ற மிகவும் அவசியமான பதிவு.
அட்டவணைகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இம்மாதம் எனது வீட்டு மின் கட்டண பெருவெடிப்பைக்கண்டு, இன்னும் நான் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..! 1500 ரூபாய் வந்த இடத்தில் 5000 ரூபாய்..!

Sasi Kala said...

யூனிட்டுக்கு 5 ரூபாய் வாங்கும் வீட்டு உஉரிமையாளர்களை என்ன செய்வது.

haja said...

solar யை பயன் படுத்துங்கள்

ஜெய்லானி said...

அம்மி , குழவிக்கல் , பனையோலை விசிறி , மண் பானை குடம் டீவிகு பதில் ரேடியோ இது மாதிரி மாறினால் கரெண்ட் பில் 45 யூனிட்டுக்கு மேலே வரவே வராதூஊஊஊஊஊஊஊஊ :-)))

ludba said...

கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் , நன்றி வேலன் ஸார்.

வேலன். said...

Tamil nesan said...
பயனுள்ள பதிவுஃஃ

நன்றி தமிழ் நேசன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

dondu(#11168674346665545885) said...
நீங்கள் சொல்லும் கணக்குக்கான அடிப்படை கால அளவு ஒரு மாதம்தானே?

ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதானெடுக்கிறார்கள். அப்போது ஸ்லாப் அதற்கேற்றாப்போ மாறுவதாக தெரியவில்லையே?

இரண்டு மாதத்துக்கு 500 யூனிட்டுகள் என்றால் மாதத்துக்கு 250 என்றுதானே கொள்ள வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்ஃஃ

நீங்கள் சொல்வதுபோல் ஒருமாதத்திற்கான அளவு என்றால் பயனீட்டு அளவினை குறைத்துவிடுவார்கள்.எந்த எந்த வகைகளில் உங்களிடம் பணம வாங்க முடியுமோ அந்த அந்த வகைகளில் வாங்கிவிடுவார்கள்.பிற்காலத்தில் உங்கள் வீட்டில் ஏ.சி. மற்றும் இன்வர்ட்டர் இருந்தால் அதற்கும் 5 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள் பாருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
மின் அதிர்ச்சி பதிவு அண்ணா ,
தலையே சுத்துது .

பார்த்து சக்தி சார்..அதிர்ச்சியில் மயக்கம் வந்து பேன் கீழே உட்கார்ந்துவிடபோகின்றீர்கள்.அடுத்தமாதம் இன்னும் அதிகமாக பில்வரும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மென்பொருள் பிரபு said...
There is a idea forming "Tamil kanini writers association". This is to improve our bargainig skills on rates. Do you want to join?ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்லது தலைவரே...

நன்றி சௌந்தர் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சிந்திப்பவன் said...
@DONDU:
மின்கட்டண அட்டவணை இரு மாதத்திற்கான பயன்பாட்டிற்கு ஆவது.

வேலன் சொல்லவருவது என்னவென்றால் ஒருவர் இருமாத பயன்பாடு 200 க்கு அருகாமையில் இருந்து அதை அவர் 200 க்கு கீழ் கொண்டுவந்தால் ( EVEN 199 IS OKAY)அவருக்கு சேமிப்பு அதிகம்.(அதே போலத்தான் 400 யூனிட் இரு மாதத்திற்கு நுகர்வோர்களும்)
வேலனுக்கு என் மனமார்ந்த நன்றி..

நன்றி சிந்திப்பவன் சார்.
வாழ்கவ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

கவிதை நாடன் said...
thagavalukku nandri sagothara..inimey naama currentey illaama thaan vaalanum pola

ஆமாம் நண்பரே...
பழைய வாழ்க்கைக்கு பழகி கொள்ளவேண்டும்..
நன்றி ..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
ஸலாம் சகோ.வேலன்,
தற்போதைய சூழலுக்கேற்ற மிகவும் அவசியமான பதிவு.
அட்டவணைகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இம்மாதம் எனது வீட்டு மின் கட்டண பெருவெடிப்பைக்கண்டு, இன்னும் நான் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..! 1500 ரூபாய் வந்த இடத்தில் 5000 ரூபாய்..ஃஃ
மனதை தேற்றிக்கொள்ளுங்கள் சகோ. அடுத்த வருடம் ஏப்ரல் மாத விலையேற்றத்தில் உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களுக்கும்(வாட்டர் ஹீட்டர்.ஏ.சி,பிரிட்ஜ் மற்றும் இன்வர்ட்டர் ஆகியவற்றிக்கு) கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆலோசித்து வருகின்றார்கள்.
வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Sasi Kala said...
யூனிட்டுக்கு 5 ரூபாய் வாங்கும் வீட்டு உஉரிமையாளர்களை என்ன செய்வது.

தனி தனி மின்இணைப்பு இருந்தால் உங்களுக்கு கூடுதல் தொகை வராது.மொத்த குடித்தனத்திற்கும் ஒரே மீட்டர் என்றால் அதிகமாக வரும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

haja said...
solar யை பயன் படுத்துங்கள்

அரசாங்கம் மிக்ஸி -கிரைண்டர் -ஃபேன் கொடுப்பதற்கு பதில் சோலர் சிஸ்டம் கொடுக்கலாம்.நன்றி ஹாஜா சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி said...
அம்மி , குழவிக்கல் , பனையோலை விசிறி , மண் பானை குடம் டீவிகு பதில் ரேடியோ இது மாதிரி மாறினால் கரெண்ட் பில் 45 யூனிட்டுக்கு மேலே வரவே வராதூஊஊஊஊஊஊஊஊ :-)))ஃஃ

நான் ஏற்கனவே பனையோலை விசிறி - ரேடியோ மண்பானை குடம் இதற்கு மாறிவிட்டேன் இன்னும் அம்மி குழவிகல்தான் உபயோகிக்கவில்லை...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் , நன்றி வேலன் ஸார்.

எவ்வளவு நாளைக்கு என்று சொல்லவில்லையே சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

அன்பை தேடி,,அன்பு said...

பயனுள்ள பதிவு பகிர்ந்த வலையக நண்பனுக்கு நன்றி

ganesh moorthi said...

மண்ணிக்கவும் இரண்டு மாதத்துக்கு 100 யூனிட்டுகள் என்றால் மின்கட்டணம் 100+20(நிலைகட்டணம்)= 120

ganesh moorthi said...

இந்த கட்டணம் 31.03.2013 வரை மட்டுமே

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்பை தேடி,,அன்பு said...
பயனுள்ள பதிவு பகிர்ந்த வலையக நண்பனுக்கு நன்றிஃஃ

நன்றி அன்பு சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ganesh moorthi said...
மண்ணிக்கவும் இரண்டு மாதத்துக்கு 100 யூனிட்டுகள் என்றால் மின்கட்டணம் 100+20(நிலைகட்டணம்)= 120ஃஃ

ஆம் நிலைக்கட்டணம் சேர்க்கவேண்டும். தகவலுக்கு நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ganesh moorthi said...
இந்த கட்டணம் 31.03.2013 வரை மட்டுமே

ஆம் இந்த நிலைமை 31.03.2013 வரைதான். அதன்பிறகு இதனைவிட கட்டணம் அதிகமாக மாறலாம்.யார்கண்டது..
வாழ்க வளமுடன்
வேலன்.

Busybee said...

More useful information velan sir... All the best and keep on post more information like this..

வேலன். said...

Busybee said...
More useful information velan sir... All the best and keep on post more information like this..

நன்றி சார்..தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Amuthan Sekar said...

Unable to understand the given tables for both Home and shop. If possible kindly explain how to know the amount for the current reading.

This month I paid Rs.886/= for 90 units for Shop. How to know this from table.

Thanks,
Amuthan

Related Posts Plugin for WordPress, Blogger...