அலுவலக பணிகளாகட்டும் வீட்டு உபயோகத்திற்காகட்டும் நாம் வேர்டில் டாக்குமெண்ட்களை தட்டச்சு செய்து வைத்திருப்போம். அந்த டாக்குமெண்டில் உள்ள பாண்ட் டிசைன.சைஸ்.கலர் நமக்கு பிடிக்காமல் போகலாம். அந்த மாதிரியான சந்தர்பத்தில் நம்மிடம் உள்ள பைலை நமக்கு தேவையான பாண்ட்டில்.தேவையான அளவில் - தேவையான நிறத்தில் எளிதில் கொண்டுவர இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Word Files-ல் நம்மிடம் உள்ள ஒரு வேர்ட்பைலையோ Add All Word Files in Folder -ஐ தேர்வு செய்திட போல்டரில் உள்ள அனைத்து வேர்ட் பைல்களையும் தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இதில் கொடுத்துள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்வதன் மூலம் தேவையான ஆப்ஷன்களை நாம் தேர்வு செய்ய்லாம். அனைத்து பணிகளும் முடிந்தபின்னர் இதில் உள்ள Start Changing கிளிக் செய்திடுங்கள்.Progess Bar --ல் மஞ்சள் நிற கட்டம் மூலம் நமது தேவை நிறைவேறுவதை நாம் அறிந்துகொள்ளலாம்.இந்த பணிக்கு உங்களுக்கு கீழே கண்ட விண்டோ கிடைக்கும்.
பாண்ட் சைஸ் மாறியதும் உங்களுக்கு கீழ்கண்ட மெசேஜ் விண்டோ ஓப்பன் ஆகும்.
மொத்தமாக பைல்களை மாற்றுவதற்கு எளியதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
3 comments:
நல்ல பதிவு திரு வேலன். அதிகமாக டாகுமெண்ட் உபயோகிப்பவர்களுக்கு இது நல்ல பயனுள்ள பதிப்பு. மற்றவர்களும் இதை உபயோகித்து பழகினால் வேலையை விரைவாக முடிக்கலாம். தொடருங்கள் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை....
Rajkumar.S
http://namatchivaya.blogspot.in/2012/10/blog-post.html
பயனுள்ள பகிர்வு சார்...
நன்றி...
Here’s also a MOV to DVD burner.
Post a Comment