வேலன்:-e-Pub புத்தகங்களை படிக்க e-pub reader

நான் சமீபத்தில் ஒரு புத்தகம் டவுண்லோடு செய்தேன் அதனை பிடிஎப் பைலில் திறந்து படிக்க பார்த்தால் முடியவில்லை. நாம் பெரும்பாலும் பிடிஎப் பைலினை தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பிடிஎப் பைலினை போலவே e-Pub பைலகளும் உள்ளது. அதனை நாம் சாதாரண பிடிஎப் ரீடரில் படிக்க முடியாது. அதற்காக உள்ள ரீடரில் தான படிக்க முடியும்.அதற்காக தேடுகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 16 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் உள்ள + குறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள பைலின் டிரைவின் போல்டரை தேர்வு செய்து உங்களது e-Pub பைலினை கிளிக் செய்யவும. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



இதில் நமது புத்தகத்தின் பெயர் - ஆசிரியர் பெயர் -மொழி -போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
இதில் நாம் படிக்க விரும்பும் புத்தகத்தின் ரீடர் ஆப்ஷனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Library.Network; Search.Language.Scrolling;.Selection.Css.Margins.Format.Styles.Indicatos.Rotation.Colors.Keys.Web என தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கான புத்தகம் திறக்கப்பட்டிருக்கும. இதில் நீங்கள்தேர்வு செய்தவற்கு ஏற்ப புத்கத்தினை ஒவ்வொரு பக்கமாக படிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.                                                                       
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ளது... மிக்க நன்றி...

xdvxd said...

சார் லிங்க்-இல்லை

Related Posts Plugin for WordPress, Blogger...