வேலன்:-வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து பைல்களை மீட்டுஎடுக்க

ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு வீடியோ,ஆடியோ,டாக்குமெண்ட்.பைல்கள் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு முன்பெல்லாம் பிளாப்பி பயன்படுத்திவந்தோம். பின்னர் அதுவே சிடியாக பரிணாமவளர்ச்சி அடைந்தது. பின்னர் சிடியின் பயன்பாடும் குறைந்து பென்டிரைவ் மிகுந்த பயன்பாட்டுக்கு வந்தது. பென்டிரைவ்களை ஒரு கணிணியில் இருந்து மற்றும் ஒரு கணிணிக்கு தகவல்கள் பாரிமாரும்சமயம் இலவசமாக வைரஸ்களும் கணிணியில் இருந்து பென்டிரைவ்விற்கு பரவிவிடுகின்றன. ஒரு பென்டிரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து தகவல்கள் பெறஇயலாது.அதிலிருந்து தகவல்களை மீண்டும்பெற நாம் Start - Run -CMD என தட்டச்சு செய்து பின்னர் எந்த டிரைவில் பென்டிரைவ் உள்ளதோ அதனை தேர்வு செய்து பின்னர் தகவல்களை பெறவேண்டும். சாதாரண மக்களுக்கு இது மிகுந்த சிரமமே...வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து அனைத்து பைல்களையும ;மீட்டு எடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. பாமர மக்களின் வேலையை சுலபமாக மாற்றிவிடுகின்றது. இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.  
இதில் நம்மிடம் உள்ள பென்டிரைவிற்கான டிரைவினை தேர்வு செய்யவும். இதில் கொடுக்கப்பட்டு:ள்ள ரேடியோ பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்யவும். பின்னர் இதில் உள்ள Proceed பட்டனை கிளிக் செய்யவும்.
 உங்களுக்கான இந்த விண்டோ திறக்கும்.சில வினாடிகள் நீங்கள் ஏதுவும் செய்யாமல் காத்திருக்கவும்.
 உங்கள் தகவல்கள் மீட்டு எடுக்கப்பட்டது என உங்களுக்கு தகவல்வரும்.
இதில் உள்ள OpenDestination கிளிக் செய்தால் உங்களுக்கான பென்டிரைவ் திறக்கப்பட்டு உங்கள் பைல்கள் அதில் தெரியவரும். நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

எனக்கு கண்டிப்பா இது தேவை...
குடும்ப போட்டோஸ் உள்ள பென்டிரைவில் சில போட்டோக்கள் மட்டும் பிரச்சினையாக இருக்கு.. வைரஸ்தான் காரணம்... இதன் மூலம் எடுக்கப் பார்க்கிறேன்...

mdniyaz said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வேலன். said...

சே. குமார் said...
எனக்கு கண்டிப்பா இது தேவை...
குடும்ப போட்டோஸ் உள்ள பென்டிரைவில் சில போட்டோக்கள் மட்டும் பிரச்சினையாக இருக்கு.. வைரஸ்தான் காரணம்... இதன் மூலம் எடுக்கப் பார்க்கிறேன்..//
நன்றி குமார் சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வாழ்த்துக்கு நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...