வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்.

நம்மிடம் உள்ள வீடியோக்களை நமக்கு வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.ஆடியோ,வீடியோ தரம் உயர்த்தவும்,வீடியோவில் வேண்டிய மாற்றங்கள் கொண்டுவரவும்இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 26 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களையோ வீடியோ பைல்களின் போல்டர்களையோ தேர்வு செய்திடவும். பின்னர் இதில் கீழேஉள்ள பார்மெட் வகைகளை தேர்வு செய்திடவும் .உங்களிடம் எந்த டிவைஸ் உள்ளதோ அதற்கென உள்ள பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 தேர்வு செய்திட்ட வீடியோவினை ப்ரிவியூ பார்க்கும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள Edit கிளிக் செய்திட Clip.3D.Crop.Effect.Watermark.Audio என எடிட் டூல்கள் கிடைக்கும்.;கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இணையத்திலிருந்து வீடியோவினை நேரடியாக இதன் மூலம் பதிவிறக்கம் செய்திட முடியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நாம் பார்க்கும் வீடியோவில் பிடிந்த காட்சிகள் இருந்தால் அதனை புகைப்படங்களாக மாற்றிடும்ஸ்னாப் ஷாட் வசதியும் இதில் உள்ளது. பிடித்த படம் வருகையில் அதை புகைபடங்களாக மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வேண்டிய மாற்றங்கள்.வசதிகள் செய்தபின்னர் இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுடைய வீடியோ பைலானது நீங்கள் செய்த மாற்றங்களுடன் மாறிகொண்டிருப்பதை காணலாம்.
பணி முடிந்ததும் உங்களுடைய பைலினை எங்கு சேமித்தீர்களோ அந்த இடம் சென்று பாரத்தால் உங்களுக்கான பைல் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Yarlpavanan said...

பயனுள்ள வெளியீடு
பதிவிறக்கிப் பாவிக்கிறேன்.

Unknown said...

vedio converteril irunthu audio mattum thaniyaga epadi piripathu brother sollunga plz

Related Posts Plugin for WordPress, Blogger...