வேலன்:-இணைய வீடியோக்களை பதிவிறக்கி பார்மெட் மாற்றமும் செய்திட.

இணைய  வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும். வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.வீடியோக்களை ரெக்கார்ட் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோவின் யுஆர்எல முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆவதை காணலாம்.
ஓரே நேரத்தில் பல வீடியோக்களை பதிவிறக்கம் செய்கையில் இதன் வலதுபுறம் உள்ள டேப்பில் டவுண்லோடு ஆகும் வீடியோக்களின் எண்ணிக்கையும் பதிவிறக்கம் முடிந்த வீடியோக்களின்  எண்ணிக்கையையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட நாம் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றோமோ அந்த பார்மெட்டுக்கு நாம் வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம். நமக்கு விருப்பமான பார்மெட்டுக்கள் கீழே கொடுத்துள்ளார்கள்.
பதிவிறக்கம் செய்திட்ட வீடியோக்களை க்யூஆர் கோட் மூலம் நாம்  நமது மொபைல் போன் மூலம் கண்டுகளிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


பொதுவாக வீடியோக்களை காண நாம் யுடியுப் வெப் தளத்தினை பயன்படுத்துவோம். ஆனால் ;இதில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வீடியோ தளங்களை கொடுத்துள்ளார்கள்.நமக்கு விருப்பமான வீடியோ தளங்களையும் நாம் சேர்த்துக்கொள்ளும் வசதியை கொடுத்துள்ளார்கள்.
 இது தவிர்த்து இணையத்திலோ அல்லது கணிணியிலோ நாம் வீடியோக்களை காண்கையில் அதனை பதிவு செய்யும் வசதியையும் கொடுத்துள்ளார்கள். பதிவாகும் வீடியோவினையும் நாம் விரும்பும் பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். 
வீடியோ பதிவிறக்கம் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றும் வசதி.வீடியோவினை பதிவு செய்யும் வசதி என இதன் பயன்பாட்டு பட்டியல் நீள்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

'நெல்லைத் தமிழன் said...

யு ஆர் எல் இல்லாமல், சில இணையதளங்கள் வீடியோ பிளே பண்ணுகின்றன. அதுவும் தவிர ஆன்லைன் வீடியோக்களும் உள்ளன. அவைகளை எப்படி தரவிரக்கம் செய்வது?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

பரிவை சே.குமார் said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

bhama anu said...

very nice
http://alltomysite.blogspot.in/

Anand, Salem said...

will it work with facebook videos?

Anonymous said...

hi iPad mini 4 la work aguma

anandhi said...

hello sir aim Anandhi Mumbai Hw u? I need ur help nan iPad mini 4 Vangiurukkiren . but android easy anyway video audio downloading eppadi pannuvadhu screen video recording thavira upayagamana software patri help pannunga pls

Related Posts Plugin for WordPress, Blogger...