கணிணியில் பார்க்கப்படுகின்ற வீடியோவினை முழுவதுமாகவோ,குறிப்பிட்ட இடம் வரையிலோ,வேண்டிய புகைப்படத்தினை ஸ்கிரீன்ஷாட் ஆகவோ எடுக்க இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் பயன்படுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் record.stop.screenshot.save & settings என ஐந்து டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Screen.Video.Audio.Screen shot.Webcom.Curser.Logo.Timer.Advance என ஒன்பது டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில உள்ள வீடியோ டேபினை கிளிக் செய்திட வரும் விண்டோவில் வீடியொ ரெசுலேஷன்.வீடியோ பிலிம் பார் செகண்ட்.எந்த பார்மெட்டில் வீடியோ சேவ் ஆகவேண்டும்,கோடக் என நிறைய ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். நமது தேவைக்கேற்ப அதனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
வீடியோவில் குறிப்பிட்ட காட்சி அழகாக இருந்தால் அதனை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து அது புகைப்படங்களில் எந்த பார்மேட்டுக்கு பிஎன்ஜி.பிஎம்பி.ஜேபிஜி என எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
வேடந்தாங்கல் சரணாயலத்தின் வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை கீழே காணலாம்.
ஒரு வீடியோவில் குறிப்பிட்ட பாடல்காட்சியோ.சண்டைகாட்சியோ.நகைச்சுவை காட்சியோ நமக்கு தேவையென்றால் அந்த வீடியோவின் நேரத்தினை செய்துகொள்ளலாம். இதன் மூலம் நமக்கு தேவையான வீடியோவினை பெறலாம்.
வீடியோ சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment