வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

கேமரா மற்றும் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் சில சமயம்அதிக எம்.பி. அளவில் இருக்கும். அதனை இணையத்திலோ அல்லது முகநூலிலோ பதிவேற்றம் செய்யும் சமயம் நேரம் ஆகும். வீடியோவின் தரம் குறையாமல் அளவினை குறைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் அளவு குறைக்கவேண்டிய பைலினை டிராக் அன்ட்டிராப் முறையில் இழுத்துவிடவும். இதில் பிக்ஸர்.பில்டிர்.வீடியோ.ஆடியோ.சப்டைடில்.மற்றும் செப்டர்ஸ் என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.வீடியோ டேபினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் நமக்கான வீடியோ அளவினை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்த வீடியோவின் அளவு குறைய ஆரம்பிக்கும்.நமது தேவைக்கேற்ப வீடியோ அளவினை பார்த்து குறைத்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதில் உள்ள ஆடியோவினை நீங்கம் செய்வதோ வேறு ஆடியோவினை சேர்ப்பதோ எளிது. மேலும் இதில் உள்ள சப்டைடில் தேவையில்லை என்றால் எளிதில் நீக்கி விடலாம். இதில் நாம் செய்த மாற்றங்களை ப்ரிவியூ பார்க்கலாம். அதற்கு இதில் உள்ள கிரியேட் வீடியோ ப்ரிவியூ கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ப்ரிவியூ பார்த்து முடிநத்ததும் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டி யிருந்தால் செய்து முடித்துவிட்டு இதில் உள்ள ஸ்டார்ட் டகிளிக் செய்திடவும் உங்களுக்கான மாற்றப்பட்ட வீடியோ நீங்கள் சேமித்த இடத்தில் இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

mohamed althaf said...

நன்றி

வேலன். said...Blogger mohamed althaf said...

நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...