கணிணியில் பயன்படுத்தும் டிரைவ்களில் உள்ள போல்டர்களின் அளவு மற்றும் இருப்பு நிலைகளை அறிந்துகொள்ளலாம். 22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் உள்ள டிரைவ்களின் வகைகளும் அதில் உள்ள போல்டர்களின் அளவினையும் கொடுத்துள்ளார்கள். மேலும் ஒவ்வொரு டிரைவாக நாம் கிளிக் செய்கையில் ஒவ்வொரு போல்டர் அளவினையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
போல்டர் அளவுகளை பார் கிராப் -பை கிராப் மற்றும் போல்டர் மேப் மூலம் அறிந்துகொள்ளலாம்.
போல்டர் மேப்மூலம் நாம் கிளிக் செய்கையில் அந்த போல்டரில் உள்ள பைல்களின் இட அளவினை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இந்த விண்டோவில் உள்ள ஏதாவது ஒரு போல்டரின் பைல்மீது கர்சரை கொண்டு செல்ல உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் அந்த பைலினை பற்றிய முழுவிவரமும் நமக்கு தெரியவரும்ஏதாவது மாற்றங்கள் செய்தவதானால் நாம் எளிதில் செய்துகொள்ளலாம். இதன் மூலம் ஒரு டிரைவில் உள்ள போல்டரில் தேவையில்லாத பைல்களை நீக்கி இடத்தினை சேமித்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
தெரிந்து கொண்டேன்.
பரிவை சே.குமார் said...
தெரிந்து கொண்டேன்.
நன்றி சார்..வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment