
பி.டி.எப். பைல்களை உபயோகிக்காதவர்களே இல்லை
யென்று சொல்லலாம். ஆனால் சில பி.டி.எப். பைல்களில்
உள்ளநமக்கு தேவைப்படும் குறிப்புகள்(விவரங்கள்) ஒரு
பைலிலும், மற்ற குறிப்புகள்(விவரங்கள்) மற்றும்
ஒரு பைலிலும் இருக்கும். ஆனால் சேர்ந்திருந்தால்
பயனுள்ளதாக இருக்கும்.எவ்வளவு நீளமான
பிடிஎப் பைல்தேவையோ அந்த அளவு பிடிஎப் பைல்
உருவாக்கிகொள்ளலாம். அதே போல் ஒரு பெரிய
பிடிஎப் பைலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தேவைப்
படும். தனியே கட் செய்து எடுப்பது கடினம். அந்த வேலை
யையும் சேர்த்து இந்த சாப்ட் வேர் செய்யும். இது டிரையல்
வேஷன் தான். உபயோகித்துப்பாருங்கள்.
அதற்கு முன்னர் இந்த சாப்ட்வேர் இயங்க உங்களுக்கு
.NET FRAME என்கின்ற சின்னப்ரோகிராம்தேவை.ஏற்கனவே
உங்கள் கணிணியில் இருந்தால்தேவையில்லை.
இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து
இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அதற்கான லிங்க்
இப்போது பிடிஎப்பைல்களை சேர்க்கும்-பிரிக்கும்
இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில்
இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்கள் இணைய
இணைப்பை துண்டிக்க சொல்லும். சிறிது நேரம்
இணைய இணைப்பை துண்டியுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

இது பதிவு செய்து முடித்ததும் நீங்கள் இந்த சாப்ட்வேரை
இயக்கிய தும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Continue Trial
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் ஒரு பிடிஎப் பைலை பிரிப்பது பற்றி பார்க்கலாம்.
அதில் முதலில் உள்ள Split கிளிக் செய்யுங்கள்.

அதில் நீங்கள் பிரிக்கவேண்டிய பைலை தேர்வு செய்யு்ங்கள்.
அதில் எத்தனை பாகங்களாக மாற்ற வேண்டும் என்பதை
முடிவு செய்து எங்கு சேமிக்க வேண்டுமோ அதை குறிப்பிட்டு
சேமியுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் குறிப்பிட்ட பிடிஎப்பைல் தனித்தனியே
நீங்கள் சேமித்துவைத்த இடத்தில் இருப்பதை காணலாம்.
அடுத்து பிடிஎப் பைல்களை இணைப்பதை காணலாம்.

இதில் உள்ள Add Files கிளிக் செய்து நீங்கள் எந்த பிடிஎப்
பைலை இணைக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு
செய்யுங்கள். அடுத்தடுத்த பைல்களையும் தேர்வுசெய்து
கொள்ளுங்கள். இதில் உள்ள Move Up & Move Down
மூலம் பைல்களை வேண்டிய இடத்திற்கு மாற்றம் செய்து
கொள்ளலாம். இதில் மேலும் Edit & Remove கட்டளைகளும்
உண்டு்.ரைட் .இப்போது பைல்களை தேர்வு செய்து விட்டீர்களா.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

உங்களது வலப்புறம் உள்ள விண்டோவில் நீங்கள்
தேர்வு செய்த பிடிஎப் பைல் உள்ளதை கவனியுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்:-

நீங்கள் Merge கிளிக் செய்தவுடன் உங்களுக்கு எங்கு சேமிக்க
வேண்டும் என்கிற விவரத்தையும் புதிய பிடிஎப்பைலுக்கு
பெயரையும் அளியுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே .கொடுங்கள்.

அவ்வளவு தாங்க. உங்கள் பிடிஎப் பைலை சேர்த்தாகிவிட்டது.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று சரியாக இருக்கின்றதா
என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
தகவல் உதவி:- திரு.கு.வசந்த குமார்
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஆ....இப்பவே கண்ணை கட்டுதே:-

இன்றைய PSD புகைப்படம் கீழே:-
(5 எம்.பிக்குள்தான் வரும்)

டிசைன்செய்தபின் வரும் படம் கீழே:-

இதுவரை பிடிஎப் பைல்களை சேர்த்து பிரித்து பார்த்தவர்கள்:-