Showing posts with label windows xp.windows 7. Show all posts
Showing posts with label windows xp.windows 7. Show all posts

வேலன்:-ஐ-கான்கள் படத்தை மாற்ற-பாகம் 1.

நாம் நமது கணிணியில் சேமித்துவைத்திருக்கும்
 தகவல்கள் சிறு சிறு ஐ-கான்களாக இருக்கும். 
ஆனால் பெரும்பாலும் அவையெல்லாம ஒரே 
மாதிரியாக இருக்கும். ஆனால் அந்த ஐ-கான்களையே
 நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி -உள்ளே
 உள்ள தகவல்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்
 கொள்ளலாம். அந்த ஐ-கான் படங்களை
 எவ்வாறு மாற்றுவது என இப்போது பார்க்கலாம். 
 முதலில் ஏதாவது ஒரு போல்டரை தேர்வு
 செய்யுங்கள். அதை கிளிக் செய்து Properties 
தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட 
விண்டோ ஓப்பன் ஆகும்.  
                                                                                        
அதில் Customise தேர்வு செய்யுங்கள். அப்போது
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.                                                                                                                                                
 அதில் கீழே உள்ள Chang Icon என்பதை
 கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட 
விண்டோ ஓப்பன் ஆகும். 
                                                                                                அதில் உங்களுக்கு எந்த உபயோகத்திற்கு
 இந்த போல்டர் பயன்படுகின்றதோ அந்த 
உபயோகத்திற்கு ஏற்றாற்போல படத்தை
 தேர்வு செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் 
புகைப்படங்கள் உள்ள போல்டருக்கு ஐ-கான்
 படம் வைப்பதாய் இருந்தால் கேமரா படத்தை
 வைக்கலாம். அதைப்போல் பாடல்கள் சம்பந்தமான
 போல்டராக இருந்தால் இசை குறியீடு சம்பந்தமான
 புகைப்படம் வைக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.                                                        
 நான் ஒவ்வோரு போல்டருக்கும் 
அதனதன் உள்ளே இருக்கும் தகவல்களுக்கு
 ஏற்ப ஐ-கான்களை தேர்வு செய்துள்ளேன்.
 உங்களுக்கு தேவையான ஐ-கானை தேர்வு
 செய்து ஓ,கே. கொடுங்கள். இப்போது கீழே
 உள்ள படத்தை பாருங்கள்.
                                                                         
   இப்போது Change Icon என்கின்ற இடத்தில் 
நாம் தேர்வு செய்த படம் வந்திருக்கும். அதில்
 உள்ள Apply கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்
 உங்கள் போல்டருக்கு உரிய ஐ-கான் 
மாறியிருப்பதை காண்பீர்கள். சரி இதுகூட
 தெரியாதா என நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஆனால் இதே ஐ-கான்களுக்கு நமது
 புகைப்படங்கள் வைத்தால் அது எவ்வளவு
 நன்றாக இருக்கும். கீழே உள்ள படத்தை 
பாருங்கள். ஐ-கான்களுக்கு பதில் எனது
 புகைப்டங்கள் உள்ளன.
                                                      
 இதை எவ்வாறு கொண்டுவருவது என 
அடுத்த பதிவில் 07.02.2010 அன்று காலையில்
 அதை பதிவிடுகின்றேன். அடுத்து பதிவு சற்று
 ஸ்பெஷல் பதிவு.அதுவரை காத்திருப்பதற்கு
 மன்னிக்கவும்.                                                                
வாழ்க வளமுடன்,                                                                                                                             
 வேலன்.                                                                                                                                                 
 JUST FOR JOLLY PHOTOS:-                                                                                                                    
இந்த மாதிரி தொங்கனா உடம்புக்கு நல்லது....                                      
 தொங்கலைனா கொம்புக்கு நல்லது..
                                               
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-

                                                                                    
டிசைன் செய்தபின் வந்த படம் மேலே:-
 இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.                                                                                                                                                                                                                                                                               
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்டாப்பில் மீண்டும் ஒரு விளையாட்டு

பொங்கல் ஸ்பெஷல் விளையாட்டு.
டெக்ஸ்டாப்பில் விதவிதமான விளையாட்டுகளை
இதுவரை பார்த்த நாம் இன்றும் ஒரு விளையாட்டை
பார்க்கலாம். இதில் மொத்தம் 9 டூல்கள் உள்ளது.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இது வெறும் 1.5 எம்.பி அளவுதான். இதை பதிவிறக்கி
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும
இப்போது உங்களுக்கு இந்த பெட்டியை சுற்றி 9 டூல்கள்
வந்திருக்கும். முதலில் உள்ள இந்த மனிதரை
பார்க்கலாம்.
THEODORE THUMB :-இந்த ஆளை
பிடித்து இழுப்பதன் மூலம் டெக்ஸ்டாப்பில்
வேண்டிய பகுதியானது ரப்பராக இழுத்து வரும்.
RID & PID THE GRAIDY KIDS:- பொம்மைகள் இரண்டு
குண்டுவீசி தானே விளையாடிக்கொண்டு இருக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

SPACE CRUSIER ATTACK:-விண்கலம் குண்டு வீசி
தாக்கும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

FOTON THE DESKTOP HERO:- சும்மா சுத்தி சுத்தி
டெக்ஸ்டாப்பில் பறப்பான் இந்த மனிதன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்

THE TOOL BOX:- சுத்தியல் கொண்டு டெக்ஸ்டாப்
பை உடைக்கலாம்.கீ:ழே படத்தை பாருங்கள்


PABLO THE PAINTER:- இதில் ஏணியை போட்டு
ஆள் பெயிண்ட் அடிப்பான். நாம் விரும்பினால்
நமது பெயரையும் பெயிண்ட் அடிக்க சொல்ல
லாம். கீழே உள்ள படத்தை பாருஙகள்.


DESKTOP SPLAT:- மேலிருந்து வரும் டிவி.
கல், வண்டு. மீன் ஆகியவற்றை கீழே விழாமல்
இந்த ஸ்பிரிங் மூலம் தடுக்க வேண்டும்.

கல்கள் விழுகின்றது.
THE ARSENAL :- 3 விதமான துப்பாக்கிகள்
உள்ளது. ஒன்று குண்டுமழை பொழியும். ஓன்று
தூள் தூளாக்ககும். ஒன்று நெருப்புமழை பொழியும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ERASER ED:- நமது கம்யூட்டரை சுத்தமாக அழித்து தந்து
விடும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.





பதிவினை பாருங்கள். கருத்தினை பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS;-
டேய்...டேய்..இறங்குடா...கிளை முறிகிறது...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
டெக்ஸ்டாப்பில் விளையாடியவர்கள் இதுவரையில்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து போல்டர்களையும் ஒரே மாதிரியாக மாற்ற


<span title=
நாம் கணிணியில் போல்டர்களை ஒவ்வோரு டிரைவிலும் ஒவ்
வொரு வியுவில் வைத்திருப்போம். தெரிந்தோ தெரியாமலோ
ஒவ்வொன்றும் ஒவ்வொறு வியுவில் இருக்கும். அவ்வாறு
இருக்கும் போல்டர்கள் அனைத்தையும் ஒரே வியுவில் கொண்டு
வருவதை இப்போது காணலாம்.போல்டர்கள் முறையே
Thumbnails,Tiles,Icons,List,Details என ஐந்து வகைகள் உள்ளன.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்
இதைப்போல் வியுவிலும் உள்ள லிஸ்டினை பாருங்கள்.
உங்களுக்கு தேவையான வகையினை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.அடுத்து Tools சென்று Folder Options
தேர்வு செய்யுங்கள்.
அதை கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் View கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள Apply to All Folders கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதாங்க. நீங்கள் தேர்ந்தெடுத்த வியுவில் அனைத்து
போல்டர்களும் மாறியுள்ளதை காண்பீர்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
அடுத்த பதிவு போட்டோஷாப் பற்றி நாளை  (11.01.2010)
திங்கள்கிழமை மாலை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
 அப்பாடா.....மதியம் சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்தது....

இன்றைய PSD டிசைன்னுக்கான புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
இதுவரையில் போல்டர்களை மாற்றிக்கொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்க

<span title=
ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம்
தகவல்களை பரிமாரிக்கொள்ள பிளாப்பியை உபயோகித்து
வந்தோம். 1.44 எம்.பி. கொள்ளளவு கொண்ட பிளாப்பி
சுமார் ரூ.15-லிருந்து ரூ25 வரை விற்றுக்கொண்டிருந்தது.
சி.டி.வாங்க வேண்டுமானால் 70-80 ரூபாய் ஆகும். ரீ-ரைட்
டபிள் சி.டி. 125 ரூபாய் ஆகியது. காலங்கள் மாறியது.
சி.டி.யே இப்போது 8 ரூபாய்க்கும் -டி.வி.டி. ரூபாய் 10-லிருந்
தும் கிடைக்கின்றது. ரீ-ரைட்டபிள் டி.வி.டி. ரூபாய் 45 க்கு
கிடைக்கின்றது. சரி அதையெல்லாம் விடுங்க. பலமுறை
அழித்து - மீண்டும் எழுத இப்போது பரவலாக பென் டிரைவ்
கிடைக்கின்றது. 4  ஜி.பி. கொள்ளளவே சுமார் 450 ரூபாய்க்கு
கிடைக்கின்றது. பிளாப்பி-சி.டி.-டி.வி.டி- என மாறியவர்கள்
இப்போது பென்டிரைவ்க்கு மாறி வருகின்றார்கள்.
கம்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் யு,எஸ்.பி. போர்ட்டை
இப்போது கம்யூட்டருக்கு முன்புறம் பொருத்துமாறு தயாரிக்
கின்றார்கள்.பென்டிரைவ் தவிர டிஜிட்டர் கேமராக்கள்,
ஐ -பாட்கள்,பிரிண்டர்கள் ,பிளேயர்கள் என அனைத்தும்
பிளக் அண்ட் பிளே வகையில் சொருகி பின் எடுதது
செல்லும் வகையில் அமைந்துள்ளது. தேவைப்படும் சமயம்
அதை சொருகி பயன்படுத்தலாம். ஆனால் நினைத்தஉடன்
அதை வெளியே எடுக்க கூடாது. இது சில இழப்புகளை
நமக்கு உருவாக்கும். யு,எஸ்.பி்.போர்டில் எப்போதும்
குறைந்த அளவு மின்சக்தி இருக்கும். இதை எடுத்தேன்
கவிழ்த்தேன் என நாம் எடுக்கும் சமயம் மின்ஒட்டம்
பாதிக்கப்பட்டு கம்யூட்டரில் பரவும். நமது தகவல்கள்
அழிந்து போகும். டிரைவ் கொடுவதோடு அல்லாமல்
நமது இதர சாதனங்களான பிரிண்டர்-கேமரா - பிளேயர்
என அனைத்தும் ஈடு செய்ய இயலாத அளவு பாதிக்கப்படும்.
இது நமக்கு தேவையா...அதனால் வரும்முன்
காப்பதே நல்லது. இனி யு,எஸ்.பி.சாதனங்களை எப்படி
முறையாக கையாளலாம் என பார்க்கலாம்.
யு.எஸ்.பி.போர்டில் நாம் சாதனத்தை இணைத்ததும்
சிஸ்டம் டிரேயின் அடிப்பாகத்தில் நமக்கு நாம்
இணைத்துள்ள சாதனத்தின் ஐ-கான் தெரியும்.
நமது வேலைகள் முடிந்ததும் அந்த ஐ-கான் மீது
கர்சரால் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Stop கிளிக் செய்தபின உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும்.
இப்போது ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்கள் சாதனத்தை வெளியே எடுத்துக்
கொள்ளலாம்.இவ்வாறு முறையாக செய்வதினால் நமது
தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் சாதனங்களும் பழுதாகாது.
அடுத்த முறை யு,எஸ்.போர்டில் எந்த சாதனத்தையும்
இணைத்து அதை நீக்கும்போது இந்த தகவலை நினைவில்
வையுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ரொம்ப சிலுத்துக்காதே...அப்புறம் நான் சிலுத்தால் நீ
தாங்கமாட்டே....

இன்றைய PSD புகைப்படத்தின் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை யு,எஸ்.போர்டில் சாதனங்களை முறையாக
 நீக்கியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பி.டி.எப். பைல்களை பிரிக்க- சேர்க்க (Splitter and Merger PDF Files)






பி.டி.எப். பைல்களை உபயோகிக்காதவர்களே இல்லை
யென்று சொல்லலாம். ஆனால் சில பி.டி.எப். பைல்களில்
உள்ளநமக்கு தேவைப்படும் குறிப்புகள்(விவரங்கள்) ஒரு
பைலிலும், மற்ற குறிப்புகள்(விவரங்கள்) மற்றும்
ஒரு பைலிலும் இருக்கும். ஆனால் சேர்ந்திருந்தால்
பயனுள்ளதாக இருக்கும்.எவ்வளவு நீளமான
பிடிஎப் பைல்தேவையோ அந்த அளவு பிடிஎப் பைல்
உருவாக்கிகொள்ளலாம். அதே போல் ஒரு பெரிய
பிடிஎப் பைலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தேவைப்
படும். தனியே கட் செய்து எடுப்பது கடினம். அந்த வேலை
யையும் சேர்த்து இந்த சாப்ட் வேர் செய்யும். இது டிரையல்
வேஷன் தான். உபயோகித்துப்பாருங்கள்.


அதற்கு முன்னர் இந்த சாப்ட்வேர் இயங்க உங்களுக்கு
.NET FRAME என்கின்ற சின்னப்ரோகிராம்தேவை.ஏற்கனவே
உங்கள் கணிணியில் இருந்தால்தேவையில்லை.
இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து
இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அதற்கான லிங்க்
டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இப்போது பிடிஎப்பைல்களை சேர்க்கும்-பிரிக்கும்
சாப்ட் வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.

இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில்
இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்கள் இணைய
இணைப்பை துண்டிக்க சொல்லும். சிறிது நேரம்
இணைய இணைப்பை துண்டியுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.



இது பதிவு செய்து முடித்ததும் நீங்கள் இந்த சாப்ட்வேரை
இயக்கிய தும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Continue Trial
கிளிக் செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் ஒரு பிடிஎப் பைலை பிரிப்பது பற்றி பார்க்கலாம்.
அதில் முதலில் உள்ள Split கிளிக் செய்யுங்கள்.


அதில் நீங்கள் பிரிக்கவேண்டிய பைலை தேர்வு செய்யு்ங்கள்.
அதில் எத்தனை பாகங்களாக மாற்ற வேண்டும் என்பதை
முடிவு செய்து எங்கு சேமிக்க வேண்டுமோ அதை குறிப்பிட்டு
சேமியுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் குறிப்பிட்ட பிடிஎப்பைல் தனித்தனியே
நீங்கள் சேமித்துவைத்த இடத்தில் இருப்பதை காணலாம்.


அடுத்து பிடிஎப் பைல்களை இணைப்பதை காணலாம்.

இதில் உள்ள Add Files கிளிக் செய்து நீங்கள் எந்த பிடிஎப்
பைலை இணைக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு
செய்யுங்கள். அடுத்தடுத்த பைல்களையும் தேர்வுசெய்து
கொள்ளுங்கள். இதில் உள்ள Move Up & Move Down
மூலம் பைல்களை வேண்டிய இடத்திற்கு மாற்றம் செய்து
கொள்ளலாம். இதில் மேலும் Edit & Remove கட்டளைகளும்
உண்டு்.ரைட் .இப்போது பைல்களை தேர்வு செய்து விட்டீர்களா.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

உங்களது வலப்புறம் உள்ள விண்டோவில் நீங்கள்
தேர்வு செய்த பிடிஎப் பைல் உள்ளதை கவனியுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்:-


நீங்கள் Merge கிளிக் செய்தவுடன் உங்களுக்கு எங்கு சேமிக்க
வேண்டும் என்கிற விவரத்தையும் புதிய பிடிஎப்பைலுக்கு
பெயரையும் அளியுங்கள்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே .கொடுங்கள்.

அவ்வளவு தாங்க. உங்கள் பிடிஎப் பைலை சேர்த்தாகிவிட்டது.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று சரியாக இருக்கின்றதா
என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
தகவல் உதவி:- திரு.கு.வசந்த குமார்

வாழ்க வளமுடன்.

வேலன்.




JUST FOR JOLLY PHOTOS:-


ஆ....இப்பவே கண்ணை கட்டுதே:-

இன்றைய PSD புகைப்படம் கீழே:-

(5 எம்.பிக்குள்தான் வரும்)

டிசைன்செய்தபின் வரும் படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.


இதுவரை பிடிஎப் பைல்களை சேர்த்து பிரித்து பார்த்தவர்கள்:-

web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...