Showing posts with label வேலன்.விளையாட்டு.குழந்தைகள். இலவச மென்பொருள்.velan.free software.kids.game.desktop game.windows xp.windows 7.english.. Show all posts
Showing posts with label வேலன்.விளையாட்டு.குழந்தைகள். இலவச மென்பொருள்.velan.free software.kids.game.desktop game.windows xp.windows 7.english.. Show all posts

வேலன்-வேர்ட் கிரிட் word grid.

ஆங்கிலத்தில் புலமை பெற ஆங்கில அறிவு அவசியம். அவ்வாறு அறிவு வளர ஆங்கிலத்தில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியவேண்டும். நிறைய சின்ன சின்ன வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் இவ்வாறு சின்ன சின்ன வார்த்தைகளை நாமே கண்டுபிடிக்க இந்த சின்ன சாப்ட்வேர் உதவும். 1 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் சின்ன சின்ன வார்த்தைகளை நாம் கர்சர் மூலம் தேர்வு செய்யவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வார்த்தை சரியாக இருந்தால் கீழே உள்ள விண்டோவில் வெள்ளை நிற எழுத்தில் வார்த்தைகள் வரும். தவறாக இருப்பின் சிகப்பு நிறத்தில் வரும்.ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கும். அதைப்போல வார்த்தைகளின் எண் மதிப்புடன் வார்த்தைகளின் எழுததுக்கெற்ப அதனை பெருக்கிகொள்ளவேண்டும். இப்போது மேலே உள்ள விண்டோவில் SLIP என்கின்ற எழுத்தின் மதிப்பு பின்வருமாறு S=1.L=2,I=1,P=4 உள்ளது.இதனை கூட்டி வருகின்ற மதிப்பு 8 ஆகும்.4 எழுத்துக்களாதலால் அதனுடன் 8 ஐ பெருக்க இப்போது SLIP என்கின்ற வார்த்தையின் மதிப்பு 8 x 4 = 32 என வரும்.
இதனைப்போல நீங்கள் அனைத்து கட்டங்களிலும் வார்த்தைகளை தேர்வு செய்து கட்டங்கள் காலி ஆனவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. அதில் உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
இதில் சுலபம்.கடினம். மிககடினம்-Easy.Normal.Hard  என மூன்று நிலைகள் உள்ளது. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
விளையாட்டுடன் கூடிய அறிவு வளரகூடிய விளையாட்டாகும் இது.இதில் வரும் புதிய வார்த்தைகளை தனியே குறித்துகொண்டு அதற்கு என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ளுங்கள். நாளடைவில் அதிகமான வார்த்தைகளை கற்றவராக நீங்கள் மாறியிருப்பீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...