ஆங்கிலத்தில் புலமை பெற ஆங்கில அறிவு அவசியம். அவ்வாறு அறிவு வளர ஆங்கிலத்தில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியவேண்டும். நிறைய சின்ன சின்ன வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் இவ்வாறு சின்ன சின்ன வார்த்தைகளை நாமே கண்டுபிடிக்க இந்த சின்ன சாப்ட்வேர் உதவும். 1 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் சின்ன சின்ன வார்த்தைகளை நாம் கர்சர் மூலம் தேர்வு செய்யவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வார்த்தை சரியாக இருந்தால் கீழே உள்ள விண்டோவில் வெள்ளை நிற எழுத்தில் வார்த்தைகள் வரும். தவறாக இருப்பின் சிகப்பு நிறத்தில் வரும்.ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கும். அதைப்போல வார்த்தைகளின் எண் மதிப்புடன் வார்த்தைகளின் எழுததுக்கெற்ப அதனை பெருக்கிகொள்ளவேண்டும். இப்போது மேலே உள்ள விண்டோவில் SLIP என்கின்ற எழுத்தின் மதிப்பு பின்வருமாறு S=1.L=2,I=1,P=4 உள்ளது.இதனை கூட்டி வருகின்ற மதிப்பு 8 ஆகும்.4 எழுத்துக்களாதலால் அதனுடன் 8 ஐ பெருக்க இப்போது SLIP என்கின்ற வார்த்தையின் மதிப்பு 8 x 4 = 32 என வரும்.
இதனைப்போல நீங்கள் அனைத்து கட்டங்களிலும் வார்த்தைகளை தேர்வு செய்து கட்டங்கள் காலி ஆனவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. அதில் உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
இதில் சுலபம்.கடினம். மிககடினம்-Easy.Normal.Hard என மூன்று நிலைகள் உள்ளது. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
விளையாட்டுடன் கூடிய அறிவு வளரகூடிய விளையாட்டாகும் இது.இதில் வரும் புதிய வார்த்தைகளை தனியே குறித்துகொண்டு அதற்கு என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ளுங்கள். நாளடைவில் அதிகமான வார்த்தைகளை கற்றவராக நீங்கள் மாறியிருப்பீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
12 comments:
அருமை சார்,
இன்றைய காலத்திற்கு ஆங்கிலத்தில் புலமை பெற ஆங்கில அறிவு அவசியம்.
மிகவும் தேவையான அவசியமானதும் கூட
பயனுள்ள மெம்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வேலன் அண்ணா நன்று.
வேலன் சார் உங்கள் பணி நீண்ட பணி போல
வாழ்த்துக்க|ள் தொடருங்கள்
மிக பயனுள்ள பதிவு
பல பயன் உள்ள தகவல்களை தங்கள் இடுகை இல் இருந்து நான் சேமித்து வைத்து உள்ளேன் PDF file களை word file களாக மாற்றும் software களும் வைத்து உள்ளேன் ஆனால் ஒரு சில PDF file களை word file களாக மாற்ற முடியவில்லை. link ஐ குடுக்கவும் நன்றி
பல பயன் உள்ள தகவல்களை தங்கள் இடுகை இல் இருந்து நான் சேமித்து வைத்து உள்ளேன் PDF file களை word file களாக மாற்றும் software களும் வைத்து உள்ளேன் ஆனால் ஒரு சில PDF file களை word file களாக மாற்ற முடியவில்லை. link ஐ குடுக்கவும் நன்றி
ஆங்கில வார்த்தைகளுக்கு கற்றுக்கொள்ள ஒரு சாப்ட்வேரா..?! பலே!.. நல்ல பதிவு..! பயனுள்ளதாகவும் இருக்கிறது..!நன்றி! வாழ்த்துக்கள்..!
FANTASTIC SIR, THANK YOU VERY MUCH
Useful and good posting as usual maaps.
தொடந்து வித்யாசமாக பதிவுகள் வழங்கும் உங்களின் உயந்த சிந்தனைக்கு என்றும் நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்.
வணக்கம் வேலன். நான் இளமை வலைப்பூவின் அடமின் கறுப்பு வெள்ளை புகைப்படத்தினை கலர் படமாக மாற்றுவது எப்படி தயவுசெய்து பதில் வழங்கமுடியுமா???
உங்கள் வலையில் அல்லது தனிபட்ட எனது மின்னஞ்சல் முகவரிக்கு....
huckgirl@yahoo.com
வணக்கம் வேலன். நான் இளமை வலைப்பூவின் அடமின் கறுப்பு வெள்ளை புகைப்படத்தினை கலர் படமாக மாற்றுவது எப்படி தயவுசெய்து பதில் வழங்கமுடியுமா???
உங்கள் வலையில் அல்லது தனிபட்ட எனது மின்னஞ்சல் முகவரிக்கு....
வேலன் சார்..மிகவும் உபயோகமான சாஃப்ட்வேர்..நன்றி..ஒரு விளம்பரம்: இன்று முதல் புதிதாய் வலைப்பதிவிட ஆரம்பித்திருக்கின்றேன்..வந்து வாழ்த்த வேண்டுகிறேன். முகவரி http://sengovi.blogspot.com/
--செங்கோவி
உலகக் கடவுள் முருகன்
Post a Comment