Showing posts with label வேலன்.velan.free software.desktop games.jigsaw.kids games.children game.games.windows xp.. Show all posts
Showing posts with label வேலன்.velan.free software.desktop games.jigsaw.kids games.children game.games.windows xp.. Show all posts

வேலன்-படங்களை பல துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க.

படங்களை துண்டுதுண்டாக மாற்றி பின்னர் மீண்டும் சேர்ப்பதிலே தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் அதைப்போல நாம் நமக்கு விருப்பமான படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்கலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை பதிவிற்க்கம் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவர்கள் அதிலேயே 3 படங்களை இணைத்துள்ளார்கள். நாம் நமக்கு விருப்பமான படத்தையும்கொண்டுவரலாம்.
நான் இங்கு இந்த புலிகளின் படத்தை தேர்வு செய்துள்ளேன். இதில் படங்களை துண்டுகளாக்கும் எண்ணிக்கையை நாம் விருப்பபடி மாற்றிக கொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் வேண்டிய எண்ணிக்கையை கொண்டுவரலாம்.இதன் கீழே உள்ள மேக் பஸில் make puzzle கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் படங்கள் துண்டுதுண்டாக கலைந்து இருக்கும்.
படங்களின் அமைப்பின் படி நாம் சேர்க்க ஆரம்பிக்கலாம்.இதன் மேல்புறம் வேண்டிய டூல்கள் உள்ளது. படங்களை சேர்ப்பதில் சிரமம் உள்ளதா - அடுத்த படத்துண்டு எது என்று கிளிக் செய்ய தானே சேர்ந்துவிடும். அதைப்போல மொத்த படமும் தானே சேர்க்கவும் செய்யலாம்.பெரிது படுத்தியும் பார்க்கலாம்.
படங்கள் சேர்த்ததும் வந்துள்ள படம்.கீழே-
மற்றும் ஒரு இயற்கை காட்சி அமைந்துள்ள படம்”-
மற்றும் ஒரு பதிவரின் படம்-
ஏற்கனவே இதுபோல் படம் சேர்க்கும் சாப்ட்வேரை நான் போட்டிருந்தாலும் இது சற்று வித்தியாசமாக இருக்கவே இதனை பதிவிட்டுள்ளேன்.குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் விருப்பபட்டு விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...