வீடாகட்டும் - அலுவலகமாகட்டும் தேவையில்லாதவைகளை அகற்றிவிட்டு சுத்தமாக வைத்திருந்தால நன்றாக இருக்கும்.. அதுபோல நாம் நமது கம்யூட்டரிலும் தேவையில்லாதவைகளை நீக்கி விட்டு சுத்தமாக வைத்திருந்தால் கம்யூட்டரின் வேகம் கூடுவதுடன் அதன் உபயோகிக்ககும் ஆயூளும் அதிகரிக்கும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். தேவையான டிரைவை தேர்வு செய்து Start Searching கொடுக்கவும்.உங்கள் கம்யூட்டரில் உள்ள பைல்களின் வகைகளையும்அது எடுத்துக்கொண்டுள்ள அளவினையும் இதில் காணலாம்.உதாரணத்திற்கு நீங்கள் புகைப்பட பைல்கள் - வீடியோ பைல்கள்-டாக்குமெண்டுகள் -பாடல்கள் என எதுவைத்திருந்தாலும் இதில் காண்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Junk பைல்களும் நமக்கு காண்பிக்கும். தேவையற்றவைகளை நாம் சுலபமாக நீக்கி விடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:- வாசகர்கள் அன்பினால் என்னை திக்குமுக்காட வைக்கின்றனர்.திருச்சியை சேர்ந்த திரு அன்பு அவர்கள் பெயருக்கு ஏற்றவாறு அன்பில் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அவரின் பதிவுலக குருவுக்கு காலம் தாழ்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்கின்ற பதிவின் தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.