வேலன்:- டிஸ்க் கிளினர்.Disk Cleaner.

வீடாகட்டும் - அலுவலகமாகட்டும் தேவையில்லாதவைகளை அகற்றிவிட்டு சுத்தமாக வைத்திருந்தால நன்றாக இருக்கும்.. அதுபோல நாம் நமது கம்யூட்டரிலும் தேவையில்லாதவைகளை நீக்கி விட்டு சுத்தமாக வைத்திருந்தால் கம்யூட்டரின் வேகம் கூடுவதுடன் அதன் உபயோகிக்ககும் ஆயூளும் அதிகரிக்கும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். தேவையான டிரைவை தேர்வு செய்து Start Searching கொடுக்கவும்.
உங்கள் கம்யூட்டரில் உள்ள பைல்களின் வகைகளையும்அது எடுத்துக்கொண்டுள்ள அளவினையும் இதில் காணலாம்.உதாரணத்திற்கு நீங்கள் புகைப்பட பைல்கள் - வீடியோ பைல்கள்-டாக்குமெண்டுகள் -பாடல்கள் என எதுவைத்திருந்தாலும் இதில் காண்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Junk பைல்களும் நமக்கு காண்பிக்கும். தேவையற்றவைகளை நாம் சுலபமாக நீக்கி விடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பின்குறிப்பு:- வாசகர்கள் அன்பினால் என்னை திக்குமுக்காட வைக்கின்றனர்.திருச்சியை சேர்ந்த திரு அன்பு அவர்கள் பெயருக்கு ஏற்றவாறு அன்பில் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அவரின் பதிவுலக குருவுக்கு காலம் தாழ்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்கின்ற பதிவின் தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

கணேஷ் said...

கணினி வேகமாக இயங்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் எவரும் உண்டா? நல்ல, பயனுள்ள ஒன்றைத் தான் அளித்துள்ளீர்கள் நண்பரே... மிக்க நன்றி!

Anonymous said...

Dear Velan,
I have a DVD full of pictures, I copied from a computer in India. When I tried to read it in a new laptop in India, the Explorer is not able to list the contents in the DVD. All it says in properties is "Avialable space 0 bytes, Used Space 0 bytes". I am sure that there are pictures sitting in the DVD.

How can I recover these pictures? Is there any virus in there? possible?

Thanks
Anbudan
Vasan

கடம்பவன குயில் said...

டிஸ்க் கிளினர் ட்ரைபண்றேன்...

கணேஷ் said...

நீங்கள் கொடுத்துள்ள லிங்க்கில் சென்று பார்த்தேன் வேலன். குருநாதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அழகாக சொல்லி இருக்கிறார். நிறையவே சம்பாதித்திருக்கிறீர்கள் - அன்பு உள்ளங்களை! வாழ்த்துக்கள்...

வேலன். said...

கணேஷ் said...
கணினி வேகமாக இயங்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் எவரும் உண்டா? நல்ல, பயனுள்ள ஒன்றைத் தான் அளித்துள்ளீர்கள் நண்பரே... மிக்க நன்றி!//

நன்றி கணேஷ் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Dear Velan,
I have a DVD full of pictures, I copied from a computer in India. When I tried to read it in a new laptop in India, the Explorer is not able to list the contents in the DVD. All it says in properties is "Avialable space 0 bytes, Used Space 0 bytes". I am sure that there are pictures sitting in the DVD.

How can I recover these pictures? Is there any virus in there? possible?

Thanks
Anbudan
Vasan//

டிவிடியில் நாம் பதிவு செய்கையில் குறைபாடுகள் ஏற்படும்.டிவிடியில் குறை இருக்கலாம்.குறிப்பிட்ட கம்பெனி டிவிடி உங்கள் கம்யூட்டரில் ரீட் ஆகாமல் போகலாம். உங்கள் டிவிடியை வேறு ஏதாவது கம்யூட்டரில் போட்டு படம்வருகின்றதா என்று பாருங்கள்..வேறு கம்யூட்டரில் படம் வந்தால் குறை உங்கள் கம்யூட்டரில்தான. வேறு கம்பெனி டிவிடி வாங்கி காப்பி செய்து பாருங்கள.படம் வரும். தங்கள் வருகைக்கு நன்றி வாசன் சார்.
வாழ்க வளமுட்ன
வேலன்.

வேலன். said...

கடம்பவன குயில் said...
டிஸ்க் கிளினர் ட்ரைபண்றேன்ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
நீங்கள் கொடுத்துள்ள லிங்க்கில் சென்று பார்த்தேன் வேலன். குருநாதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அழகாக சொல்லி இருக்கிறார். நிறையவே சம்பாதித்திருக்கிறீர்கள் - அன்பு உள்ளங்களை! வாழ்த்துக்கள்...ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anbudasan said...

super

வேலன். said...

Anbudasan said...
supeஃஃ

நன்றி அன்புதாசன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

HOW TO DOWNLOAD FROM 4 SHARED.COM
PLEASE ELABORATE THE STEPS EVENTHOUGH I HAVE THE LOG IN PASS WORDS I AM UNABLE TO DOWNLOAD!!

Related Posts Plugin for WordPress, Blogger...