Showing posts with label How to Hidden Files and Folder. Show all posts
Showing posts with label How to Hidden Files and Folder. Show all posts

பைல் மற்றும் போல்டரை மறைப்பது எப்படி?How to Hidden Files and Folder.

பைல் மற்றும் போல்டரை மறைப்பது எப்படி?
How to Hidden Files and Folder.
புதியவர்களுக்காக

நாம் சில சமயம் முக்கிய மான படங்கள்,

கணக்கு விவரங்கள், ரகசிய குறிப்புகள் மற்றும்

வங்கி கணக்கு வழக்குகளை பைல்களில் பதிவிட்டு

இருப்போம். நாம் இல்லாத போது நமது கணிணியில்

மற்றவர்கள் பார்க்காமல் பைல்கள் -போல்டர்களை

மறைத்துவைக்கலாம். அதை எவ்வாறு மறைப்பது

என பார்க்கலாம்.

நீங்கள் மறைக்க விரும்பும் பைலை முதலில் 

தேர்ந்தெடுங்கள்.அந்த பைலை கிளிக் செய்து 

Properties தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு இந்த 

விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் கீழாக பார்த்தீர்களேயானல் உங்களுக்கு

Read -only  மற்றும் Hidden என இரண்டு Attributes இருப்பதை

காணலாம். இதில் உள்ள Hidden க்கு எதிரில் உள்ள 

ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.


இப்போது Apply பட்டன் உங்களுக்கு பிரகாசமாக தெரிய

ஆரம்பிக்கும். அதை மவுஸால் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது உங்களுடைய பைலானது மங்கலாக தெரிய

ஆரம்பிக்கும். இப்போது மேற்புறம் உள்ள Tools கிளிக் 

செய்யுங்கள். உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் Folder Options கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இந்த

விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதலில் உள்ள General ஐ விட்டு விடுங்கள் .

அடுத்து உள்ள View- ஐ கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு

கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் Hidden files and folder கீழ் உள்ள Do not show hidden 

files and folders எதிரில் உள்ள ரேடியோ பட்டனை 

கிளிக் செய்து Apply  -ஐ தேர்வுசெய்து ஓகே கொடுத்து

வெளியேறவும். இப்போது நீங்கள் மறைக்க விரும்பிய

போல்டரானது மாயமாய் மறைந்துள்ளதை காண்பீர்கள்.

அவ்வளவுதாங்க...உங்களுடைய பைலானது மறைந்து

விட்டதா?

சரி மறைத்துவிட்டோம். அதை மீண்டும் எப்படி

பார்வைக்கு தெரியும் படி கொண்டுவருவது?

முன்பு சொன்னபடி Tools -Folder Options-General-

View - செல்லுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி

விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் உள்ள Show hidden files and folders எதிரில் உள்ள 

ரேடியோ பட்டனை கிளிக் செய்து Apply - Ok - கொடுத்து

முறையே வெளியேறுங்கள். நீங்கள் மறைத்த பைல்

பளிச் சென்று தெரிவதை காண்பீர்கள்.



பதிவை படித்துப்பாருங்கள்.பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

டிஜிட்டல் கேமரா உபயோகம் இல்லாதபோது

அதில் உள்ள பேட்டரியை கழட்டி வைத்து

விடுங்கள். இதனால் பேட்டரி லீக் ஆகி கேமரா

பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...