How to Hidden Files and Folder.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நாம் சில சமயம் முக்கிய மான படங்கள்,
கணக்கு விவரங்கள், ரகசிய குறிப்புகள் மற்றும்
வங்கி கணக்கு வழக்குகளை பைல்களில் பதிவிட்டு
இருப்போம். நாம் இல்லாத போது நமது கணிணியில்
மற்றவர்கள் பார்க்காமல் பைல்கள் -போல்டர்களை
மறைத்துவைக்கலாம். அதை எவ்வாறு மறைப்பது
என பார்க்கலாம்.
நீங்கள் மறைக்க விரும்பும் பைலை முதலில்
தேர்ந்தெடுங்கள்.அந்த பைலை கிளிக் செய்து
Properties தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு இந்த
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கீழாக பார்த்தீர்களேயானல் உங்களுக்கு
Read -only மற்றும் Hidden என இரண்டு Attributes இருப்பதை
காணலாம். இதில் உள்ள Hidden க்கு எதிரில் உள்ள
ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது Apply பட்டன் உங்களுக்கு பிரகாசமாக தெரிய
ஆரம்பிக்கும். அதை மவுஸால் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.
இப்போது உங்களுடைய பைலானது மங்கலாக தெரிய
ஆரம்பிக்கும். இப்போது மேற்புறம் உள்ள Tools கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Folder Options கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இந்த
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள General ஐ விட்டு விடுங்கள் .
அடுத்து உள்ள View- ஐ கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Hidden files and folder கீழ் உள்ள Do not show hidden
files and folders எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
கிளிக் செய்து Apply -ஐ தேர்வுசெய்து ஓகே கொடுத்து
வெளியேறவும். இப்போது நீங்கள் மறைக்க விரும்பிய
போல்டரானது மாயமாய் மறைந்துள்ளதை காண்பீர்கள்.
அவ்வளவுதாங்க...உங்களுடைய பைலானது மறைந்து
விட்டதா?
சரி மறைத்துவிட்டோம். அதை மீண்டும் எப்படி
பார்வைக்கு தெரியும் படி கொண்டுவருவது?
முன்பு சொன்னபடி Tools -Folder Options-General-
View - செல்லுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி
விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Show hidden files and folders எதிரில் உள்ள
ரேடியோ பட்டனை கிளிக் செய்து Apply - Ok - கொடுத்து
முறையே வெளியேறுங்கள். நீங்கள் மறைத்த பைல்
பளிச் சென்று தெரிவதை காண்பீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.
டிஜிட்டல் கேமரா உபயோகம் இல்லாதபோது
அதில் உள்ள பேட்டரியை கழட்டி வைத்து
விடுங்கள். இதனால் பேட்டரி லீக் ஆகி கேமரா
பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
27 comments:
//முக்கியமான படங்கள்,
கணக்கு விவரங்கள்,
ரகசிய குறிப்புகள் //
ஒளிச்சி வைக்கிறா மேரி கூடவா இந்த பொட்டில , கீது இன்னாடா கோரமே இது ??
ரொம்ப டாங்க்ஸ்பா !! நம்ப மினிமா நா எங்க ஒளிச்சி வச்சாலும் கண்டுக்கோ , இப்ப இன்ன பண்ண போதுன்னு பாக்கறேன்.
டவுசர் பாண்டி. அவர் பின்னூட்டம் செம்ம சோக்காக்கீது.
வழமை போல இந்தப் பதிவும் படங்களுடன் -அருமை. நன்றி.
நன்றி வேலன் அவர்களே!!!!!
ஒளிச்சி வைக்கிறா மேரி கூடவா இந்த பொட்டில , கீது இன்னாடா கோரமே இது ??
ரொம்ப டாங்க்ஸ்பா !! நம்ப மினிமா நா எங்க ஒளிச்சி வச்சாலும் கண்டுக்கோ , இப்ப இன்ன பண்ண போதுன்னு பாக்கறேன்.//
இந்த பொட்டியிலே கத்துக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ கீது.எனக்கு தெரிச்சது கொஞ்சம்தான்.
இதுல வர மெட்டரு தொடர்ந்து படி.மினிமாவை விட நீ புத்திசாலி ஆவ..//
இதுக்கு மேல நமக்கு உன்பாசை வரவில்லை.கருத்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
டவுசர் பாண்டி. அவர் பின்னூட்டம் செம்ம சோக்காக்கீது.
வழமை போல இந்தப் பதிவும் படங்களுடன் -அருமை. நன்றி.//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
கேப்டன் ஜெகன் கூறியது...
நன்றி வேலன் அவர்களே!!!!!//
நன்றி நண்பர் கேப்டன் ஜெகன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
என்ன தான் Hidden folderல போட்டாலும் Search செய்யும் போது optionsல include hidden files கொடுத்தா டவுசர் கிழிஞ்சிராதா???
how to 'hide' files & folders
don't mistake me, just saying :)
மிக அருமையான. பதிவு....உங்கள் பதிவு முழுதும் பயனுள்ளவையாக உள்ளன...........தொடர்ந்து கலக்குங்குங்கள்............வாழ்த்துக்கள்....
//என்ன தான் Hidden folderல போட்டாலும் Search செய்யும் போது optionsல include hidden files கொடுத்தா டவுசர் கிழிஞ்சிராதா???/
- பிரேம்குமார் கூறியது...
யப்பா !! அண்த்தே, நீ சார்ச்னா செய்யி, இல்ல ,அது இன்னாவோ ஆப்பரேசின் ஆவது செய்யி, அதுக்கு நம்ப டவுசர ஏம்பா கைட்டரிங்கோ ??? இன்னா இது சல்பேட்டா கதியா கீது ??
அன்பு நண்பர் அவர்களே,
தெளிவான முறையில் படங்களுடன் விளக்கும் விதம் அருமை.
நன்றி.
நம்ப டவுசர் பாண்டியின் வார்த்தைகளைக் கூர்ந்து படிக்கவேண்டியுள்ளது.
சூப்பர்.
பிரேம்குமார் கூறியது...
என்ன தான் Hidden folderல போட்டாலும் Search செய்யும் போது optionsல include hidden files கொடுத்தா டவுசர் கிழிஞ்சிராதா???//
தற்காலிக மறைவுதான் இது.கணிணியில் விசயம் தெரிந்தவர்கள் நேரே சென்று hidden files open செய்து பார்த்துவிடுவார்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.
Desperado கூறியது...
how to 'hide' files & folders
don't mistake me, just saying :)//
பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள்.நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Kanna கூறியது...
மிக அருமையான. பதிவு....உங்கள் பதிவு முழுதும் பயனுள்ளவையாக உள்ளன...........தொடர்ந்து கலக்குங்குங்கள்............வாழ்த்துக்கள்....//
தாங்களும் எனது பதிவிற்கு முதன்முதலில் கருத்துசொல்ல வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி. கூறியது...
//என்ன தான் Hidden folderல போட்டாலும் Search செய்யும் போது optionsல include hidden files கொடுத்தா டவுசர் கிழிஞ்சிராதா???/
- பிரேம்குமார் கூறியது...
யப்பா !! அண்த்தே, நீ சார்ச்னா செய்யி, இல்ல ,அது இன்னாவோ ஆப்பரேசின் ஆவது செய்யி, அதுக்கு நம்ப டவுசர ஏம்பா கைட்டரிங்கோ ??? இன்னா இது சல்பேட்டா கதியா கீது ??//
கோபிக்க வேண்டாம் நண்பரே..இது வேற ஓருவருடைய டவுசர்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
தியாகராஜன் கூறியது...
அன்பு நண்பர் அவர்களே,
தெளிவான முறையில் படங்களுடன் விளக்கும் விதம் அருமை.
நன்றி.//
நன்றி நண்பரே..தாங்களை சில நாட்களாக பதிவில் காணயியலவில்லை...?
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
தியாகராஜன் கூறியது...
நம்ப டவுசர் பாண்டியின் வார்த்தைகளைக் கூர்ந்து படிக்கவேண்டியுள்ளது.
சூப்பர்.//
உண்மைதான் அவர் எழுதியதை படித்து புரிந்துகொள்ள சென்னை பேச்சுதமிழ் அகராதி ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன்,
கணிணிக்கு புதியவர்களுக்கான எளிய பதிவு இனிய தமிழில் சுலப வழியில் அதற்குறிய விவரமான விளக்கப்படங்களுடன் அற்புதமாய் பதிவிட்டு இருக்கிறீர்கள் வழக்கப்படி.
வாழ்த்துகள், வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,
கணிணிக்கு புதியவர்களுக்கான எளிய பதிவு இனிய தமிழில் சுலப வழியில் அதற்குறிய விவரமான விளக்கப்படங்களுடன் அற்புதமாய் பதிவிட்டு இருக்கிறீர்கள் வழக்கப்படி.
வாழ்த்துகள், வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தேன். வாழ்த்தியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
எனது மடிகனி வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது .u tube போன்ற சைட் களுக்கு சென்று பார்க்கும் பொது உடனே shutdown ஆகிவிடுகிறது .மேலும் வளைகுடாவில் பெரும்பாலான சைட் பிளாக் அதனால் hotspot shield ,ultra surf போன்றவை cp யில் use பண்ணினால் கம்ப்யூட்டர் கேடு ஆகுமா ?
malar கூறியது...
எனது மடிகனி வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது .u tube போன்ற சைட் களுக்கு சென்று பார்க்கும் பொது உடனே shutdown ஆகிவிடுகிறது .மேலும் வளைகுடாவில் பெரும்பாலான சைட் பிளாக் அதனால் hotspot shield ,ultra surf போன்றவை cp யில் use பண்ணினால் கம்ப்யூட்டர் கேடு ஆகுமா ?//
உங்கள் மடிக்கணிணியின் ஓஎஸ் மீண்டும் ஒருமுறை இன்ஸ்டால்செய்துபாருங்கள். அதிலும் சரியாகவில்லையென்றால் ராம்மில்தான் பிரச்சனையிருக்கலாம். hotspot shield ,ultra surf உபயோகிக்கும் சமயம் உங்களுக்கு Hardware-ல் பிரச்சனை வராது.சாப்ட்வேரில் வேண்டுமானாலும் வரலாம்.
வாழக வளமுடன்,
வேலன்.
வணக்கம் அய்யா நலம் நலம் அறிய ஆசை. உங்கள் வலைப்பூ பார்த்து நான் போட்டோசாப் தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி அய்யா.நான் எப்ப இருப்பது துபாயில். அய்யா போட்டோசாப்பில் தமிழ் பாண்ட் வரவில்லை அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா....
நன்றி வணக்கம்...veera766@gmail.com
விடுதலைவீரா கூறியது...
வணக்கம் அய்யா நலம் நலம் அறிய ஆசை. உங்கள் வலைப்பூ பார்த்து நான் போட்டோசாப் தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி அய்யா.நான் எப்ப இருப்பது துபாயில். அய்யா போட்டோசாப்பில் தமிழ் பாண்ட் வரவில்லை அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா....
நன்றி வணக்கம்...veera766@gmail.com//
பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் வேர்ட்டில் தமிழ் பாண்ட் வருகின்றதா?
வந்தால் போட்டோஷாப்பிலும் தமிழ் வரும். தமிழ் எழுத்துருக்கள் இல்லையென்றால் இன்ஸ்ட்டால் செய்திடவும்.(வெளிநாட்டு சூழ்நிலையில் புகைப்படம் வெளியிட்டுள்ளீர்கள்.நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்)
வாழ்கவளமுடன்,
வேலன்.
தகவல் பயனுள்ளதாக இருந்தது.
ஆடிப்பாவை கூறியது...
தகவல் பயனுள்ளதாக இருந்த //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
very very thanks all is well
Post a Comment