Showing posts with label kids game.desktop game.desktop. Show all posts
Showing posts with label kids game.desktop game.desktop. Show all posts

வேலன்-மூளைக்கு வேலைதரு்ம் விளையாட்டு


அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள். இன்று விடுமுறையி்ல் விளையாடும் சாப்ட்வேர் பற்றி பதிவிடலாம் என்று உள்ளேன். மூளைக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு.மொத்தம் 5 பிரிவுகள். ஒவ்வொன்றிலும் 4 உட்பிரிவுகள் ஒவ்வேரு உட்பிரிவிலும் 10 விளையாட்டுக்கள் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் இதி்ல் உள்ளது. 8 எம்பி கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்து அதி்ல் உள்ள உட்பிரிவினை தேர்வு செய்து பின்னர் மேலே உள்ள General Test என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவி்ல் பொருந்தாத பொருள் ஒன்று உள்ளது். அதை எது என்று கண்டுபிடியுங்கள்.
கணக்கு விளையாட்டில் எந்த எண்ணுடன் எந்த எண் கூட்டினால் விடை வருமோ அதை கிளிக் செய்யுங்கள்.
ஏறுவரிசை -இறங்கு வரிசையி்ல் எண்கள் கொடுக்கப்ட்டிருக்கும். இதி்ல் வரிசைபடி எண்களை தேர்வு செய்யவும்.
நீங்கள் வெற்றிப்பெற்றால் மதிப்பெண்ணுடன் நற்சான்றிதழும் வழங்கப்படும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
குழந்தைகளுக்கு அருமையான விளையாட்டு. நீங்களும் கொஞ்சநேரம் குழந்தையாகி விளையாடித்தான் பாருங்களேன்.பார்க்க சுலபமாக தோன்றினாலும் கொஞ்சம் கடினமாகவே உள்ளது்.அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கடை(velang.blogspot.com) உண்டு.மறக்காமல் வந்துவிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...